விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. இந்த கதையில் கண்ணம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு வெண்பா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது.அதிலும் வெண்பாவின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இதற்கு முன் ஃபரீனா சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம். இந்த சீரியலில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற ஆசையில், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே களங்கத்தை மூட்டி விடுவதில் இருந்து அதற்கு இடையூறாக யார் வந்தாலும் அதை தடுப்பது வரை அனைத்து வேலைகளையும் பார்க்கும் கொடூர கதாபாத்திரத்தில் செம்மையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
ஃபரீனா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் ஃபரீனா சீரியலில் இருந்து விலகுவதாக வதந்திகள் வெளிவந்தது. ஆனால் அது வெறும் வதந்தியாகவே முடிந்தது. அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்துவிட்டு, 3 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெண்பாவாக நடிக்க வந்தார் ஃபரீனா. தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இதுத்தவிர இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரீனா, போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து தனது பேஜில் அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார்.
Taanakkaran Review : விக்ரம் பிரபுவின் சினிமா கெரியரில் தி பெஸ்ட் மூவி டாணாக்காரன்!
இப்படி இருக்கையில், ஃபரீனாவிடம் அவரின் ரசிகர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க மாட்டீர்களா? என்பது தான். சில மாதங்களுக்கு முன்பு ஃபரீனா வெளியிட்ட ரிலீஸில் கூட , ஒரு ரசிகர், ஒரு பக்கம் சீரியலில் பிஸியோ பிஸி கிடைக்கும் கொஞ்சம் நேரத்திலாவது குழந்தையுடன் நேரத்தை செலவு செய்யுங்கள். ரீல்ஸ் எல்லாம் அப்புறம் எடுக்கலாம் என்று பதிவு செய்து இருந்தார். இதற்கு ஃபரீனா மிகவும் காட்டமான விளக்கத்தை பதிலாக அவருக்கு கொடுத்து இருந்தார்.
பாரதி பற்றி வெண்பா சொன்ன பொய்.. கண்ணம்மா சீரியல் எபிசோடில் அடுத்தடுத்த திருப்பம்!
இப்படி இருக்கையில், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலை தவிர ஃபரீனா கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அபி டெய்லர் சீரியலிலும் பவானி என்ற ரோலில் நடித்து வந்தார். இதிலும் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில், ஃபரீனா தற்போது பவானி ரோலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை, அந்த கதாபாத்திரத்தில் இனிமேல் ராஜ பார்வை சீரியல் புகழ் கீர்த்தி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
ஃபரீனாவின் இந்த விலகலுக்கு என்ன காரணம்? என ரசிகர்கள் பெரிய விவாவத்தையே சமூகவலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர். பலரும் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க அவர் இந்த முடிவு எடுத்து இருக்கலாம் என கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லை, ஃபரீனாவின் இன்ஸ்டா பக்கத்திலும் பலரும் பவானி ரோலில் இருந்து விலகி விட்டீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஃபரீனா பதில் சொன்னால் மட்டுமே இந்த தகவல் உண்மையா? விலகலுக்கு என்ன காரணம்? என்பது அனைவருக்கும் தெரிய வரும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.