Home /News /entertainment /

பாரதி கண்ணம்மாவில் வெண்பாவுக்கு கல்யாணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

பாரதி கண்ணம்மாவில் வெண்பாவுக்கு கல்யாணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் துர்கா தான் வந்து வெண்பாவின் கதையை முடித்து வைப்பார்,

    பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த வெண்பாவை திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளையின் என்ட்ரி இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகுகிறது. வெண்பாவின் அம்மா ஷர்மிளா, மகளுக்காக நடத்தும் சுயவரம் போட்டியில் இன்று வெண்பாவை பெண் பார்க்க வீட்டுக்கு ஒருவர் வருகிறார்.

    பாரதி - கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் திருமணம் குறித்த அப்டேட்டுகள் சீரியலை விறுவிறுப்பாக்கியுள்ளது. வழக்கம் போல் பாரதி ஒருபக்கம், கண்ணம்மா ஒரு பக்கம் என சண்டை போட்டு கொண்டிருக்க, குழந்தை லட்சுமிக்கு மட்டும் எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரியும் என்பது பாரதியை தவிர மற்ற எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதனால் மொத்த குடும்பமும் இப்போது லட்சுமி மீது பாசத்தை கொட்டி வருகிறார்கள். இன்றைய எபிசோடில் கூட சவுந்தர்யா ஆசையாக தனது பேத்திக்கு லன்ச் எடுத்து செல்கிறார்.

    ஆனால் லட்சுமியின் பேச்சில், நடவடிக்கையில் மாற்றம் இருப்பது மட்டும் ஹேமாவுக்கு தெரிகிறது. அடுத்து ஹேமா, கண்ணம்மா பற்றி உண்மையை கண்டுப்பிடிப்பார் போல. ஆனால் இதை எல்லாம் தாண்டி சீரியலை பார்க்க தூண்டும் ட்ராக் வெண்பாவின் திருமணம் தான். ஏற்கெனவே சொல்லியது போலவே, ஷர்மிளா , வெண்பாவிடம் இன்று உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். ரெடி ஆகு  என்கிறார். யார் மாப்பிள்ளை? என தெரிந்து கொள்வதில் வெண்பாவும், சாந்தியும் ஆவலாக இருக்கின்றனர்.

    தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?

    கடைசி வரை ஷர்மிளா சொல்லவே இல்லை. புடவை, நகை, பூ வைத்து குடும்ப குத்து விளக்கு போல் தயாராகி நிற்கிறார் வெண்பா. மாப்பிள்ளை வீட்டாரும் வருகின்றனர். அவர்களிடம் அடக்கமான, அமைதியான, ஹோம்லி பெண் நடந்து கொள்கிறார் வெண்பா. இதை பார்த்து அவரின் அம்மா ஷர்மிளாவுக்கே அப்படியொரு ஆச்சரியம். கடைசியில் மாப்பிள்ளையிடம் தனியாக பேச வேண்டும் என்கிறார். எல்லா திரைப்படத்திலும் வருவது போல் தன்னை பற்றி தவறாக சொல்லி மாப்பிள்ளையை வெண்பா ஓட வைக்கிறார். வெண்பாவை இதுவரை வில்லியாக பார்த்த ரசிகர்கள் இந்த காமெடி ட்ராக்கையும் விரும்பி பார்க்கிறார்கள்.

    சிம்பு விஷயத்தில் சீரியல் நடிகையை திட்டிய காஜல் பசுபதி! ஷாக்கான ரசிகர்கள்

    ஆனால் ஏற்கெனவே இணையத்தில் உலா வரும் தகவலின் படி, துர்கா தான் வெண்பாவுக்கு ஷர்மிளா பார்த்து வைக்கும் மாப்பிள்ளையாக இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள். அவரின் என்ட்ரி சீரியலில் கூடிய விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி