• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாமியார் மருமகள் பிரியும் நேரம்.. ஹேமாவால் சவுந்தர்யா எடுக்கும் எதிர்பாராத முடிவு!

மாமியார் மருமகள் பிரியும் நேரம்.. ஹேமாவால் சவுந்தர்யா எடுக்கும் எதிர்பாராத முடிவு!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

உண்மையை சவுந்தர்யா சொன்ன நாளிலிருந்து பிரச்சனை பெரிதாக வெடிக்க தொடங்கி விட்டது.

  • Share this:
    ஒற்றுமையான மாமியார் மருமகளுக்கு அர்த்தமாக இருந்த கண்ணம்மாவும் சவுந்தர்யாவும் ஹேமா விஷயத்தில் சண்டை போடும் அளவுக்கு கதை வந்துவிட்டது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மா கடந்த ஒரு வாரமாக ரசிகர்களுக்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து வருகிறது. இந்த சீரியலின் ஆரம்பக்கட்டத்தில் பாரதி, கண்ணம்மாவை அவன் அம்மா சவுந்தர்யாவை எதிர்த்து திருமணம் செய்து கொண்டான். அதனால் கண்ணம்மாவை பார்த்தாலே சவுந்தர்யா வெறுத்து ஒதுக்கினார். கொஞ்சம் கொஞ்சமாக சவுந்தர்யா மனதில் கண்ணம்மா இடம் பிடிக்க, கண்ணம்மா கர்ப்பம் ஆனதும் சவுந்தர்யா கண்ணம்மாவை முழுமையாக ஏற்றுக் கொண்டார். ஆனால் அப்போது பாரதி ,கண்ணம்மாவுக்கு எதிராக திரும்பி வீட்டை விட்டு துரத்தினான்.

    கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே அனுப்பிய பிறகு கண்ணம்மா 8 வருடங்களாக படாத கஷ்டமில்லை. அதே போல் தனது மருமகள் கண்ணம்மாவை தேடியும் சவுந்தர்யா பல இடங்களில் அலைந்தார். ஒருவழியாக கண்ணம்மாவை பார்த்ததும் அவளுக்கு பல விதங்களில் உதவி செய்து வந்தார்.பாரதி, கண்ணம்மாவை வெறுத்தி ஒதுக்கினாலும் எப்போதுமே சவுந்தர்யா, கண்ணம்மா பக்கம் தான். இந்நிலையில், கண்ணம்மாவின் குழந்தை ஹேமா பிறந்த உடனே தூக்கி சென்று இத்தனை ஆண்டுகளாக வளர்த்து வந்த உண்மையை கண்ணாம்மாவிடம் சவுந்தர்யா சொன்ன நாளிலிருந்து பிரச்சனை பெரிதாக வெடிக்க தொடங்கி விட்டது.

    ஹேமாவை அழைத்து செல்ல, கண்ணம்மா வீட்டுக்கு வந்து தர்ணா செய்ய, சவுந்தர்யா 4 நாளில் சமரசம் செய்து ஹேமாவை உன்னுடன் அனுப்பி வைக்கிறேன் என சத்தியம் செய்கிறார்.. அதை நம்பி வீட்டுக்கு போன கண்ணம்மாவால் ஹேமாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதற்காக அடுத்த நாளே ஹேமாவை பார்க்க கோயில் போவதாக சாக்கு சொல்லி வீட்டுக்கு போய் கூப்பிடுகிறாள். கண்ணம்மாவின் இந்த நடவடிக்கை மீது பாரதிக்கு சந்தேகம் அதிகரிக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் கண்ணம்மா, ஹேமாவிடம் உண்மையை சொல்லி விட போகிறாள் என்ற பயத்தில் சவுந்தர்யா வேக வேகமாக கோயிலுக்கு போகிறாள்.

    அடி வாங்காத ஏரியாவே இல்லை போல.. ஹவுஸ்மேட்ஸின் வெறுப்பை சம்பாதிக்கும் அபிஷேக்!

    அந்த நேரம் பார்த்து சரியாக ஹேமாவிடம் கண்ணம்மா அம்மா பற்றி பேச, பதற்றத்தில் சவுந்தர்யா பேச்சை மாற்றி ஹேமாவை விளையாட தனியாக அனுப்புகிறார். அதற்குள் கண்ணம்மாவிடம் நீ செய்வது தவறு என்றும் சண்டை போடுகிறார். கண்ணம்மாவும் சவுந்தர்யா செயத காரியத்தை சொல்லி அவரிடம் சண்டை போட ஹேமாவால் இருவருக்கும் பயங்கர வாக்குவாதம் நடக்கிறது. பின்பு ஹேமாவை சவுந்தர்யா வீட்டுக்கு அழைத்து போக, ஹாலில் காத்துக் கொண்டிருந்த பாரதி கோயிலில் என்ன நடந்தது என்பதை ஹேமா மூலம் தெரிந்து கொள்கிறான். கோபத்தில் அம்மா சவுந்தர்யாவிடமும் சண்டை போடுகிறான். தன்மான சிங்கம் கண்ணம்மா கூப்பிடாமலே நம்ம வீட்டுக்கு வருவதற்கு காரணம் என்ன? என்றும் கேள்வி கேட்கிறான்/.உண்மையை சொல்ல முடியாமல் சவுந்தர்யா தவிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: