ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இப்படி செய்யலாமா கண்ணம்மா? ரோஷினியின் ஃபோட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

இப்படி செய்யலாமா கண்ணம்மா? ரோஷினியின் ஃபோட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

பாரதி கண்ணம்மா ரோஷினி

பாரதி கண்ணம்மா ரோஷினி

"நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா கண்ணம்மா!" என்கிற விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  ஒரு டிவி சீரியல், பெருமளவிலான ரசிகர்களை கவர்ந்து இழுக்க என்னென்ன செய்யலாம்? ஏற்கனவே மிகவும் பிரபலமான சீரியல் நடிகர்களுக்கு கதாபாத்திரங்களை வழங்கலாம் அல்லது தரமான கதைக்களத்தை அமைக்கலாம், குறைந்தப்பட்சம் ஜவ்வு போல இழுத்து அடிக்காத எபிசோட்களை ஒளிபரப்பி ரசிகர்களை 'என்கேஜ்டு' ஆக வைத்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கலாம்.

  ஆனால் ஒரு டிவி சீரியல், மீம்ஸ் வழியாக ட்ரெண்ட் ஆகி எக்கச்சக்கமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தது என்று கூறினால் நம்புவீர்களா? நிச்சயம் நம்புவீர்கள்! ஏனெனில் நம்மில் பலரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலை அப்படித்தானே பார்க்க தொடங்கினோம்!

  விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில், கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகிறது. எங்கு செல்வது என்று தெரியாமல், கையில் ஒரு பையோடும், வயிற்றில் குழைந்தையோடும் கண்ணம்மா தெருத்தெருவாக அலைகிறாள். அந்த எபிசோடிலும் அதற்கடுத்து வெளியான எபிசோட்களிலும் போகும் இடம் தெரியாமல் தவித்தது கண்ணம்மா மட்டும் அல்ல, அந்த சீரியலின் டைரக்டரும் தான். சுவாரசியமான கட்டத்தில், கதையை துளிகூட நகர்த்தாமல் கண்ணம்மாவை ரோடு ரோடாக நடக்கவிட்டு எபிசோட்களை முடிக்க, கடுப்பான ரசிகர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் - மீம்ஸ்!

  அப்படி என்ன வேண்டுதல்? வருங்கால மனைவியுடன் முருகன் கோயிலில் சீரியல் நடிகர்!

  சந்துபுந்து முதல் சந்திர மண்டலம் வரை கண்ணம்மா நடை பயணம் மேற்கொள்வது போன்ற மீம்ஸ்கள் பட்டிதொட்டி எங்கும் வைரல் ஆகின. "என்ன கொடுமை சரவணன் சார்!" என்று சிரித்த, சிந்தித்த அனைவரும் பாரதி கண்ணம்மா சீரியலின் ரசிகர்கள் ஆகினர்  டிஆர்பி ரேட்டிங்கும் அதிகமானது. அப்படியே கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியனுக்கு ரசிகர் கூட்டமும் அதிகமானது.

  டயலாக் இல்லாமல் கண்களாலேயே பேசும் அளவிற்கு நடிப்பில் அசத்திய ரோஷினி ஹரிப்ரியன் ஒருகட்டத்தில் (திடீரென்று) பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. எவ்ளோ நாள் தான் சீரியல்குள்ளேயே சிக்கி தவிப்பது சினிமா பக்கம் போக வேண்டாமா? என்று சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் திரைப்பட வாய்ப்புகள் காரணமாக சீரியல் இருந்து விலகியதாக கூறப்பட்ட ரோஷினி, தற்போது அதே விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.

  உழைப்புக்கு கிடைத்த வெற்றி… பிரபல விஜய்டிவி சீரியல் நடிகருக்கு தெலுங்கில் கிடைத்த வாய்ப்பு!

  ஆகமொத்தம் சினிமா பக்கமும் போனது போல தெரியவில்லை; விஜய் டிவிக்கு டாட்டா காட்டியது போலவும் தெரியவில்லை. வாய்ப்புகளுக்காக நடத்தப்படும் போட்டோ ஷூட்களுமம் முடிந்தபாடில்லை. அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி சமூக ஊடங்கங்களில் பகிறும் ரோஷினியை இன்ஸ்டாகிராமில் மொத்தம் 1.2 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள், ட்விட்டரில் 15 ஆயிரம் பேர் இவரை ஃபாலோ செய்கிறார்கள்!

  அப்படியான ஒரு லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில் ரோஷினி, சினிமா வாய்ப்புகளுக்காக கவர்ச்சி என்கிற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது போல் தெரிகிறது. பாத்டப்பில் கருப்பு நிற டிஷர்ட் அணிந்துக்கொண்டு, சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் கொடுத்துள்ளார் ரோஷினி. ஒருபக்கம் ஜொள்ளு பார்ட்டிகள் லைக்ஸ்களை வாரிக்குவிக்க, மறுபக்கம் "நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா கண்ணம்மா!" என்கிற விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளது. இன்னொரு முக்கியமான மேட்டர் என்னவென்றால், குறிப்பிட்ட போட்டோ ரோஷினியின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் மட்டுமே ஷேர் செய்யப்பட்டுள்ளது!

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv