Home /News /entertainment /

பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க வரும் நடிகர்!

பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க வரும் நடிகர்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

இவர் தற்போது கயல் சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்கிறார் கயல் சீரியல் நடிகர் ஃபவாஸ் ஜயானி.

    விஜய் டிவி-யில் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து கொண்டிருந்த பாரதி கண்ணம்மா தொடர் எப்போது முடியும்? என ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு கதையில் சுவாரசியம் இல்லாமல் தொடர் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் மக்களிடையே பிரபலமாக முக்கிய காரணம் இதில் முன்பு கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிபிரியன் தான். தற்போது கண்ணம்மா கேரக்ட்ரில் நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். இந்த சீரியாலில் ஹீரோயினுக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த வில்லி கதாபாத்திரத்தில் வெண்பா ரோலில் நடிகை மற்றும் விஜே-வான ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார்.

    மீண்டும் பழைய இடத்திற்கு சென்ற பிக் பாஸ் அர்ச்சனா!

    பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் போதும் போதும் என்ற அளவுக்கு இயக்குனர் ட்விஸ்ட் தந்துவிட்டார். அதனால் சீரியலை சீக்கிரமாக முடித்து வேற சீரியலை டெலிகாஸ்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள். பல ஆண்டுகளாக "ஜவ்வு" போல இழுத்து அடிக்கும் ஒரு மேட்டர் எப்ப முடியும் என்கின்றனர் ரசிகர்கள். கிட்டத்தட்ட எல்லா உண்மையும் வெளிவந்து விட்டது.லட்சுமிக்கு பாரதி - கண்ணம்மா பற்றி தெரிந்து விட்டது. அதே போல் பாரதிக்கு லட்சுமி - ஹேமா பற்றியும் தெரிந்து விட்டது. ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் போதும் சீரியலுக்கு க்ளைமாக்ஸ் தான்.

    பிரியங்காவின் அளவில்லா மகிழ்ச்சிக்கு காரணம் இதுதானாம்.. அவரே சொல்லிவிட்டார்!

    அதே போல் வெண்பா - ரோகித் கல்யாணமும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க வருகிறார் கயல் சீரியல் புகழ் நடிகர் ஃபவாஸ் ஜயானி. இவர் தற்போது கயல் சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரிலும் தோன்ற இருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இவர், பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத்துடன் ஷூட்டிங்கில் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதே நேரம் இவர் நடிக்கும் ரோல் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி