Home /News /entertainment /

பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் கல்யாணமா? கண்ணீர் வடிக்கும் லட்சுமி!

பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் கல்யாணமா? கண்ணீர் வடிக்கும் லட்சுமி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை தோழிகளாக சுற்றி வந்த ஹேமாவும் லட்சுமியும் இன்றைய எபிசோடில் சண்டை போட்டு பிரிந்து விடுகின்றனர்.

    பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம் என ஹேமா எடுத்த முடிவுக்கு, லட்சுமி குறுக்கே நிற்பது தான் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியலின் ஹைலைட் எபிசோடு.

    பாரதி கண்ணம்மா சீரியல் டி.ஆர்.பி இந்த வாரம் பெரும் சரிவை சந்தித்து இருக்கிறது. ரோஷினியின் விலகலுக்கு பின்பு சீரியல் ஓரளவுக்கு நல்ல ரேட்டிங்கில் தான் இருந்தது.ஆனால் கடந்த சில வாரமாக ஹேமா மற்றும் லட்சுமி என குழந்தைகளை வைத்தே கதை செல்வது பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹேமா , லட்சுமி ஸ்கூலில் பாதி எபிசோடு முடிந்து விடுகிறது. இதனால் ரசிகர்கள் சீரியலை விரும்பி பார்ப்பதில்லை. இதைப் புரிந்து கொண்ட இயக்குனர் அதிரடி திருப்பங்களை சீரியலில் புகுத்தி உள்ளார். அதாவது, இதுவரை தோழிகளாக சுற்றி வந்த ஹேமாவும் லட்சுமியும் இன்றைய எபிசோடில் சண்டை போட்டு பிரிந்து விடுகின்றனர். அதற்கு காரணம், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம் என ஹேமா எடுக்கும் முடிவு தான்.

    இதையும் படிங்க.. கலர்ஸ் தமிழின் ’இது சொல்ல மறந்த கதை சீரியல்’.. கணவனை இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை!

    இன்றைய எபிசோடில், ஹேமா இதுப்பற்றி மொத்த குடும்பத்திடமும் சொல்கிறார். அதாவது லட்சுமியின் அம்மா கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் மறுமணம் செய்து வைக்கலாம் என ஹேமா சொல்ல, சவுந்தர்யா, வேணு, அஞ்சலி, அகிலனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஹேமாவுக்கு இப்படியொரு ஒரு எண்ணம் வர வேண்டும் என்பதே அவர்களின் ஆசை. கடைசியில் அது நடக்க, சந்தோஷத்தில் குதிக்கின்றனர். ஆனால் ஹேமாவிடம் இதைக்காட்டிக் கொள்ளாமல் பாரதியிடம் இதுப்பற்றி பேசலாம் என கூறி ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    இதையும் படிங்க.. வள்ளி திருமணம் சீரியலில் இணையவுள்ள பிரபல நடிகை!

    அதே நேரம், லட்சுமி அப்பாவை தேடி கண்டுப்பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறாள். கண்ணம்மாவிடமே சபதம் போடுகிறார். அதாவது, அப்பாவை நானே தேடி கண்டுப்பிடிப்பேன் என லட்சுமி சொல்ல கண்ணம்மாவுக்கு பயம் தான் அதிகம் ஆகிறது. இப்படி இருக்கையில், ஹேமா, லட்சுமியிடம் போய் பாரதி - கண்ணம்மா கல்யாணம் பற்றி பேச, லட்சுமி கோபத்தில் ஹேமாவை அடிக்கவே செல்கிறாள். இனிமேல் நீ எங்க அம்மாவிடம் பேச கூடாதுன்னு ஆர்டரும் போடுகிறார். அதாவது லட்சுமிக்கு அப்பாவை தேடி கண்டுப்பிடிக்க வேண்டும் என்பது தான் எண்ணம். அம்மாவுக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைக்க மாட்டேன் என கூறி ஆவேசமாக அங்கிருந்து கிளம்புகிறாள். ஆனால் ஹேமா, கண்ணம்மாவை பாரதிக்கு கல்யாணம் செய்து வைப்பேன் என அடம்பிடிக்கிறாள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி