பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் ஜோடியாக பிரபல சீரியல் நடிகர் என்ட்ரி கொடுக்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் இப்போது வில்லி வெண்பாவின் கல்யாண ட்ராக் தான் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய வில்லியாக சுற்றித்திரிந்த டாக்டர் வெண்பாவை அவரின் அம்மா காமெடி பீஸாக மாற்றி விட்டார். வெயிட்டை குறை என தொடங்கியவர் கல்யாணம் செய்து வைத்துவிட்டு தான் அமெரிக்கா போவேன் என அடம்பிடிக்கிறார். அதற்காக எத்தனையோ மாப்பிள்ளைகளை பார்த்தார். ஆனால் வெண்பா , வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைகளை ஏதேதோ சொல்லி, குடிகாரி போல் நடித்து ஓட வைக்கிறார். இப்படி தான் சீரியல் ட்ராக் சென்று கொண்டிருக்கிறது.
கல்யாண விஷயத்தில் அவளை ஏமாத்திட்டாங்க.. பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி!
ரசிகர்கள் துர்கா வந்தால் நன்றாக இருக்கும், துர்காவை வெண்பாவுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டால் கதை இன்னும் சூடு பிடிக்கும் என்று கூறி வருகின்றனர். ஆனால் துர்கா என்ட்ரிக்கு பதில் வேற ஒரு கேரக்டரை இயக்குனர் சீரியலில் அறிமுகம் செய்துள்ளார். இவர் தான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளை என்று வெண்பாவின் அம்மா, அவருக்கு அறிமுகம் செய்கிறார். இதற்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
பேச்சிலர் பார்ட்டி வைத்து கொண்டாடிய சீரியல் நடிகை.. திரண்டு சென்ற பிரபலங்கள்!
வெண்பாவுக்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்து இருப்பது வேற யாருமில்லை, வேலைக்காரன் சீரியலில் வேலன் ரோலில் நடித்தவர் தான். அண்மையில் தான் வேலைக்காரன் சீரியல் முடிவடைந்தது. அதில் வேலன் ரோலில் நடித்த சபரி தான் வெண்பாவுக்கு ஜோடியாக பாரதி கண்ணம்மா சீர்யலில் என்ட்ரி கொடுக்கிறார். இவரின் அறிமுகம் சீரியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆரம்பமே அதிரடி போல், வெண்பாவை ரவுடிகள் கலாட்டா செய்து கலாய்க்கின்றனர். அப்போது ஹீரோ போல் என்ட்ரி கொடுக்கும் சபரி ரவுடிகளிடம் சண்டை போட்டு வெண்பாவை காப்பாற்றுகிறார். அதற்கு நன்றி கடனாக தன்னுடைய வீட்டுக்கு வெண்பா, அவரை அழைக்கிறார். வீட்டுக்கு அவர் வந்த பின்பு, இவர் தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை என அதிர்ச்சி கொடுக்கிறார் வெண்பாவின் அம்மா ஷர்மிளா.
பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதி ரோலில் நடிக்க முதன் முதலில் கமிட் ஆனது நடிகர் சபரி தான் என்பது இதில் சுவாரசியமான விஷயம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.