• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • லட்சுமியின் அந்த ஒரு வார்த்தையால் மொத்த முடிவையும் மாற்றிய கண்ணம்மா!

லட்சுமியின் அந்த ஒரு வார்த்தையால் மொத்த முடிவையும் மாற்றிய கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கடைசியாக பாரதியை பிரிய வேண்டும் என்று முடிவு எடுக்கிறாள் கண்ணம்மா.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவும் கண்ணம்மாவும் சேர போகும் அந்த தருணத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    பாரதி கண்ணம்மா இந்த வாரம் புரமோவிலே ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது கூடிய விரைவில் கண்ணம்மாவுக்கு ஹேமா குறித்த உண்மை, அவரின் மாமியார் சவுந்தர்யா மூலமே தெரிய போகுது என்பது. ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் அந்த எபிசோடு ஒளிப்பரப்பாகுமா என்ன? கண்டிப்பாக வார இறுதியில் வெள்ளி அல்லது சனிக்கிழமை தான் அந்த காட்சிகள் ஒளிப்பரப்பாகும் என்பது தெரிந்து விட்டது. இன்றைய எபிசோடில் கண்ணம்மா பாரதியை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கும் தருவாயில் உள்ளார். நேற்றைய தினம் கண்ணம்மாவின் மனசாட்சி வந்து பேச கண்ணம்மா பயங்கர குழப்பத்தில் இருக்கிறாள். பாரதியை பிரிந்தாலும் இதுவரை இரண்டு பேரும் விவாகரத்து பற்றி சிந்தித்ததே இல்லை. இந்த நேரத்தில் வில்லி வெண்பாவின் சதியால் விவாகரத்து பேச்சு தற்போது அதிகமாகி இருக்கிறது. என்ன முடிவு எடுக்கலாம்? என்ற குழப்பத்தில் கண்ணம்மா இருக்கிறாள்.

    இந்த பக்கம், அஞ்சலியின் நிலைமை அதை விட மோசம். உயிரோடு இருப்போமா? மாட்டோமா? என்ற கவலையில் தினம் தினம் பொழுதை கழிக்கிறாள். வெண்பா கொடுத்த மாத்திரை தீர்ந்து போக இனி அதை தொடர்ந்து சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து ஹேமா வந்து தீர்ந்து போன மாத்திரையை அகில் வாங்கி வந்து விட்டதாக கொடுக்கிறாள். அப்படியே தெய்வ வாக்கு போல அஞ்சலியிடம் மாத்திரை பற்றியும் சந்தேகத்தை கிளப்பிவிடுகிறாள். அஞ்சலி பலமாக யோசிக்க சரியான நேரத்தில் வெண்பா அஞ்சலிக்கு ஃபோன் செய்து மாத்திரை பற்றி விசாரிக்கிறாள்.

    அஞ்சலிக்கு சந்தேகம் கூட, வெண்பாவிடம் நக்கலாகவே பேசுகிறாள். இதனால் அஞ்சலிக்கு சந்தேகம் வந்துவிட்டது என்பது வெண்பாவுக்கு தெரிந்து விடுகிறது. ஒருபக்கம் பாரதி எந்த பிரச்சனையும் தனக்கு இல்லை என்பதை காட்டிக் கொள்ள ஹேமாவுடன் ஜாலியாக விளையாடி கொண்டிருக்கிறான். இதை பார்த்த சவுந்தர்யாவும் வேணும், பாரதியின் பிளான் என்ன? என்று யோசிக்கிறார்கள். பெத்த அம்மா, அப்பாவே பாரதி பற்றி தெரியாமல் கவலைக் கொள்கிறார்கள். கடைசியாக பாரதியை பிரிய வேண்டும் என்று முடிவு எடுத்த கண்ணம்மா, கடைசியாக அவளிடம் இருக்கும் பாரதி ஃபோட்டோவை கிழித்து போட முடிவு எடுக்கிறாள்.

    அப்போது தான் தூக்கத்தில் இருக்கும் லட்சுமி கண்ணாம்மாவின் முடிவை மாற்றுவது போல ஃபோட்டோவை கிழிக்க வேண்டாம் என சொல்வது போல் “டாக்டர் அங்கிள் இங்க வாங்க என்ன விட்டு எங்கையும் போகாதீங்க” அப்படின்னு புலம்புகிறாள். எனக்காக இல்லை என்றாலும் லட்சுமிக்கு அப்பா வேணும் என்பது கண்ணம்மாவுக்கு அப்போது புரிய வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: