அம்மாடி வெண்பா உன் பாட்சா சவுந்தர்யாம்மா கிட்ட பலிக்குமா? பல்பு வாங்குன மொமண்ட்!

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்

“பாரதி அவன் பொண்டாட்டி வீட்ல இருக்கிறான்’ன்னு சந்தோஷமா சொல்ல அவ்வளவு தான் பொங்கி எழுகிறாள் வெண்பா.

 • Share this:
  bharathikannamma episoide hotstar : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய ஹைலைட் சவுந்தர்யாவிடம் வெண்பா பல்பு வாங்குவது.

  பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு. அதற்கு காரணம், சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வசப்படுத்தியது தான். வில்லியாக வெண்பா, சிறந்த மாமியாராக சவுந்தர்யா, எப்போதுமே பெண்களிடம் திட்டும் வாங்கும் பாரதி, அனைத்து பெண்களின் ரோல் மாடலாக கண்ணம்மா என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் தனி ரகம்.

  இந்த சீரியலை ஆன் டைமில் பார்பதை விட ஹாட்ஸ்டாரில் முன்கூட்டியே பார்க்கும் பெண்கள் தான் அதிகம். அப்படி ஹாட்ஸ்டாரில் மிஸ் செய்த பெண்களுக்காக இதோ...

  also read ராஜா ராணி 2ல கதை வேற மாறி போகுது!

  இன்று ஒளிப்பரப்பாக இருக்கும் எபிசோட்டில் பாரதியை வழி மேல் விழி வைத்து காத்துகொண்டிருக்கும் சவுந்தர்யா தனது கணவரிடம் புலம்பி தள்ளுகிறார்கள். “பாரதிய இன்னும் காணோம். ஒருவேளை குடிச்சிட்டு எங்கனா விழுந்து கிடப்பானா? டாக்டரே இப்படி பண்ணலாமா” அப்படி இப்படின்னு சவுந்தர்யா புலம்பி கொண்டே கண்ணம்மாவுக்கு ஃபோன் செய்கிறார். அத்தையின் ஃபோனை பார்த்து தயக்கத்துடன் அதை ஆன் செய்கிறாள் கண்ணம்மா (காரணம் இருக்கு.. நம்ம பாரதி இன்னிக்கு நைட் கண்ணம்மா வீட்டில தானே தங்கி இருக்கிறான்)

  ஃபோனை எடுத்த மருமகளிடம் அன்பாக பேசி, அப்படியே பாரதி ஹேமாவை பார்க்க வந்தானா? என போட்டு வாங்குகிறார். தயங்கி தயங்கி பேசும் கண்ணம்மாவிடம் விடாமல் கேள்வியால் துளைக்க ‘ஆமாம் அத்தை அவரும் இங்க தான் தங்கி இருக்கிறார்” அப்படின்னு கொரோனா லாக்டவுன் கதை, தோசை சாப்பிட்ட கதை, 2 மகள்களும் பாரதியுடன் தூங்கும் கதை எல்லாத்தையும் ஒப்பிக்கிறாள். அவ்வளவு தான் சவுந்தர்யாவும் அவரது கணவரும் அதை ஸ்பீக்கரில் போட்டு சந்தோஷமாக கேட்டு மகிழ்கிறார்கள்.

  இந்த பக்கம், பாரதி எங்க போனான், ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருதுன்னு வேலைக்காரியிடன் புலம்பிகிறாள் வில்லி வெண்பா. கடைசியா வேலைக்காரி கொடுத்த ஐடியா படி, சவுந்தர்யாவுக்கு கால் பண்ணி கேட்ட வெண்பாவுக்கு காத்திருந்தது பல்பு. ஃபோனை எடுத்தது வெண்பாவிடம் நக்கலாக பேசிய சவுந்தர்யா “பாரதி அவன் பொண்டாட்டி வீட்ல இருக்கிறான்’ன்னு சந்தோஷமா சொல்ல அவ்வளவு தான் பொங்கி எழுகிறாள் வெண்பா. நெக்ஸ்ட் எங்க நேரா பாரதிய தேடி தான்..  நடு ராத்திரியில் மிஷின் சத்தத்தைக் கேட்டு எழுந்த பாரதி கிச்சனுக்கு போகிறான். அங்கு கண்ணம்மா காலைக்கு தேவையான மாவை அரைத்துக் கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்த பாரதி கவலையில் பரிதாபமாக கண்ணம்மாவை பார்க்கிறான். பாரதி வந்ததை கவனித்த கண்ணம்மா உடனே என்ன வேண்டும் என கேட்க குடிக்க தண்ணீர் கேட்கிறான். பாரதி மனதில் “உனக்கு ஏண்டி இந்த தலையெழுத்து இப்படி கஷ்டப்படனும்னு” அப்படி நினைக்கிறது அப்படமா தெரியுது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: