Home /News /entertainment /

தீவிரவாதிகளின் பிடியில் ஹேமா - லட்சுமி.. உயிரை கொடுத்து காப்பாற்றுவாரா பாரதி?

தீவிரவாதிகளின் பிடியில் ஹேமா - லட்சுமி.. உயிரை கொடுத்து காப்பாற்றுவாரா பாரதி?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

தீவிரவாதிகளின் லீடர் ஹேமா - லட்சுமியை சுட்டு தள்ளும்படி உத்தரவிடுகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாரதி கண்ணம்மா சீரியலில் தீவிரவாதிகளின் பிடியில் மாட்டிக் கொண்ட ஹேமா - லட்சுமியை காப்பாற்ற உயிரை கொடுத்து போராடுகிறார் டாக்டர் பாரதி.

    பாரதி கண்ணம்மா சீரியல் இப்போது பீஸ்ட மூவி சாயலில் சென்று கொண்டிருக்கிறது. மாலுக்கு பதிலாக இங்கு ஆஸ்பிட்டல். மத்திய அமைச்சர் உயிரோட வேண்டும், அவரை ஆப்ரேஷன் செய்து காப்பாற்ற வேண்டும் என செக் வைக்கின்றனர் தீவிரவாதிகள். டாக்டர் போல் உள்ளே போன போலீஸையும் அவர்கள் கண்டுப்பிடித்து விட்டனர். இந்நிலையில் இப்போது பாரதி தான் ஆப்ரேஷன் செய்வதாக ஒத்துக் கொள்கிறார். ஆஸ்பிட்டலில் வேலை செய்யும் நர்ஸ்கள், பொதுமக்கள், பாரதியின் குடும்பத்தை சேர்ந்த கண்ணம்மா, லட்சுமி, ஹேமா, அகில், அஞ்சலி எல்லோருமே ஆஸ்பிட்டலில் மாட்டிக் கொண்டனர்.

    vijay tv pugazh : பிரம்மாண்டமாக நடந்த புகழ் - பென்சி ரிசப்ஷன்.. திரண்டு சென்ற பிரபலங்கள்!

    இவர்கள் அனைவரையும் பாரதி தான் காப்பாற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் சவுந்தர்யாவும் வேனுவும் இதை நினைத்து பதறி துடிக்கின்றனர். ஒருவேளை ஆப்ரேஷன் தோல்வியில் முடிந்து விட்டால் லட்சுமி - ஹேமாவை முதலில் கொன்று விடுவோம் என தீவிரவாதிகள் பாரதியை மிரட்டுகின்றனர். தற்போது வெளியாகியுள்ள புரமோவில் அமைச்சருக்கு பாரதி ஆப்ரேஷன் செய்கிறார். ஆனால் பாசிடிவ்வான எந்த மூவும் இல்லை.



    இதனால் தீவிரவாதிகளின் லீடர் ஹேமா - லட்சுமியை சுட்டு தள்ளும்படி உத்தரவிடுகிறார். இதை கேட்டு கண்ணம்மா துடிக்கிறார். ஹேமாவும் லட்சுமியும் கதறி அழுகிறார்கள். பாரதி கையில் தான் இருவரின் உயிரும் இருக்கிறது. கண்டிப்பாக பாரதி ஆப்ரேஷனை வெற்றிக்கரமாக முடிப்பார் என கண்ணம்மா நம்புகிறார். கடைசியில் என்ன நடக்கும்? என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி