முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எல்லாத்துக்கும் கண்ணம்மா தான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த பாரதி!

எல்லாத்துக்கும் கண்ணம்மா தான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த பாரதி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து தடைகளிலும் பாரதிக்கு துணையாக நின்றார் கண்ணம்மா

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடுக்கான லேட்டஸ்ட் புரமோவில் பாரதி எல்லோர் முன்னிலையிலும் கண்ணம்மா பற்றிய உண்மையை சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்து விட்டது.சென்னையில் ஒரு நாள் கதையை பட்டி டிங்கரிங் பார்த்து இயக்குனர் டெலிகாஸ்ட் செய்த எபிசோடு நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் இணையத்தில் சில ட்ரோல்களும் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் பாரதி - கண்ணம்மாவின் நடிப்பு ரசிகர்களை கவனிக்க வைத்தது. ஒருபக்கம் வெண்பா பொறாமையில் பொங்கி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடின் புரமோவில் கண்ணம்மாவை வாழ்த்தி பேசுகிறார் பாரதி.

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும்.. சீரியல் நடிகையின் ஆசை!

அதாவது, கணேஷ் கொடுத்த அனைத்து பிளான்களும் சொதப்ப, கடைசி நேரத்தில் கண்ணம்மா செய்த உதவியால் தான் 30 நிமிடத்தில் பாரதி இதயத்தை சென்னைக்கு கொண்டு வந்தார். புயல், மழை, வெள்ளம் என அனைத்து தடைகளிலும் பாரதிக்கு துணையாக நின்றார் கண்ணம்மா. கடைசி நேரத்தில் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து எல்லோரையும் பிரமிக்க வைத்தார். இதை பாரதியே எதிர்பார்க்கவில்லை.

' isDesktop="true" id="746871" youtubeid="Y-W6p6G8Yvo" category="television">

இப்படி இருக்கையில், பிரஸ் மீட் நடைபெறுகிறது. அதில் எல்லோரும் பாரதியை புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால் பாரதி இது எல்லாத்துக்கு காரணம், கண்ணம்மா தான்  என்கிறர். அனைவரும் கைத்தட்டுகின்றனர். இதை டிவியில் சவுந்தர்யா, விஜய், வேணு, ஹேமா சேர்ந்து பார்க்கின்றனர். கண்ணம்மாவை அறிமுகப்படுத்தி பாரதி அவருக்கு பின்னால் நிற்கிறார்.

பெருமை மிக்க பெண்களை சிறப்பித்த கலர்ஸ் தமிழின் மங்கையர் திருவிழா!

இதை பார்த்து வெண்பாவின் அம்மா ஷீலாவும் பாராட்டுக்கிறார். ஆனால் வெண்பா கோபத்தில் கத்துகிறார். இந்த காட்சிகளை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv