விஜய் டிவி சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவின் முக்கிய கதாபாத்திரமாக அஞ்சலி ரோலில் நடித்தவர் கண்மணி மனோகரன். இவர் சமீபத்தில் தான் இந்த சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில் இவர் ஜீ தமிழில் லீட் ரோலில் நடிக்கும் சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியது. ஆனால் தற்போது வரை சீரியல் வெளியான பாடில்லை. இந்நிலையில் இந்த சீரியல் குறித்த வதந்தி இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால் அது உண்மையில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கி கொண்டிருந்தது. ஆனால் ரோஷினியின் விலகலுக்கு பின்பு எல்லாமே தலை கீழானது. அவருக்கு பதிலாக, கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வந்தார். ஓரளவுக்கு மீண்டும் டிஆர்பி உயர்ந்த நேரத்தில் தான் மறுபடியும் ஒரு அதிர்ச்சி. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு வெளியேறினார். ஆரம்பத்தில் கண்ணம்மாவிற்கு எதிராக செயல்பட்ட அஞ்சலி என்கிற கதாபாத்திரம், கண்ணம்மா மீதான புரிதல் காரணமாகவும், மற்றொரு கதாபாத்திரமான அகிலன் இடையேயான கெமிஸ்ட்ரியின் காரணமாகவும் மெயின் கேரக்டர் ஆன கண்ணம்மாவிற்கு நிகராக ஒரு காதாபாத்திரமானார் கண்மணி. இதற்கிடையில் தான், இனி பாரதி கண்ணம்மாவில் அஞ்சலியாக நடிக்க போவதில்லை என்று அறிவித்து பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் கண்மணி.
அப்பாடா! பல பொறுப்புகளையும் கடமைகளையும் துறந்தேன் – விராட் கோலி நிம்மதி
இதற்கு காரணம், அவருக்கு ஜீ தமிழில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது தான். இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அந்த நாடகத்தின் பாதி தலைப்பு மட்டுமே வெளியாகி உள்ளது, அது ‘அமுதாவும் _____’ என்பதே ஆகும். குறிப்பிட்ட ஜீ தமிழ் சீரியலின் டீஸர் வீடியோ வழியாக, கண்மணி இந்த நாடகத்தில் 'அமுதா 'என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை அறிய முடிந்தது. பலரும் இந்த சீரியலுக்காக கார்த்திருந்தனர்.
பிக் பாஸில் தன்னை பற்றி பேசிய அனிதாவுக்கு வேற மாதிரி ரிப்ளை கொடுத்த சிம்பு!
தாயின் மறைவால் தன் படிப்பை நிறுத்தியதால் கல்விக்காக ஏங்கும் அமுதா என்கிற ஒரு கதாபாத்திரம், தனது படிப்பைத் தொடரவும் தனது கனவுகளை அடையவும் ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள், அப்படியான '
அமுதா' என்கிற வேடத்தில் தான் கண்மணி நடிக்கிறார் என்ற அனைத்து தகவலும் வெளியான பின்பு சீரியல் குறித்த எந்த அப்டேட்டும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் தான் இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்படுவதாக இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவ தொடங்கின. இதுக் குறித்து கண்மணி ரசிகர்கள் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அந்த தகவல் வெறும் வதந்தி மட்டுமே பிரபல சின்னத்திரை அப்டேட் இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்மணி நடிக்கும் சீரியல் நிறுத்தப்படவில்லை என்றும் கூடிய விரைவில் சீரியலின் டீசர், புரமோ வெளியாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.