Home /News /entertainment /

டீச்சரான பாரதி கண்ணம்மா அஞ்சலி.. சீரியலை விட்டு போக இதுதான் உண்மையான காரணமா?

டீச்சரான பாரதி கண்ணம்மா அஞ்சலி.. சீரியலை விட்டு போக இதுதான் உண்மையான காரணமா?

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா அஞ்சலி புதிய சீரியலில் ஆசிரியை பாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சீரியல் முடிவதற்கு முன்னரே அல்லது சீரியல் பரபரப்பான திருப்பங்களோடு சென்று கொண்டிருக்கும் நேரத்தில் சீரியலை விட்டு விலகுவது வழக்கம். இதற்கு முக்கிய காரணம், நடித்துக் கொண்டிருக்கும் சீரியலை விட நல்ல வாய்ப்பு அல்லது சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது என்பது தான் பரவலாகக் கூறப்படுகிறது. இந்த நல்ல வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்ற காரணத்திற்காக ஒரு சீரியலில் இருந்து அல்லது ஒரு சேனலிலிருந்து மற்றொரு சேனலுக்கு மாறுவது புதிது கிடையாது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்த கண்மணி மனோகரன்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக முதலில் வில்லத்தனம் செய்யும் ரோலில் நடித்தார் கண்மணி மனோகரன். முதலில் வில்லியாக அறிமுகமானாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதேபோல இவருடைய கதாபாத்திரம் கண்ணம்மாவுக்கு ஆதரவாக பத்திரமாக மாறும் பொழுதும், அஞ்சலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் திடீர் என்று தற்போது பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறி ஜீ தமிழ் சேனலில் ‘அமுதாவும் ....?’ என்ற ஒரு புதிய சீரியலில் ஆசிரியை பாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க.. சீரியலை விட்டு பாதியில் போனது வீண் போகவில்லை… பாரதி கண்ணம்மா அகிலன் ஹீரோவானார்!

    விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு சென்ற நடிகை நடிகர் நடிகைகளின் பட்டியலில் கண்மணி மனோகரனும் சமீபத்தில் இணைந்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக இருந்தாலும் அஞ்சலியாக இவர் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றாலும், ஜீ தமிழின் புதிய நாடகத்தில் இவருக்கு கதாநாயகி வேடம் என்று கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் ஜீ தமிழ் புதிய சீரியலின் புரோமோவை கண்மணி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

    இதையும் படிங்க .. ஜாமீனில் வரும் வெற்றி.. அபியின் அடுத்த முயற்சி! பரபரப்பான திருப்பத்தில் தென்றல் வந்து என்னை தொடும்!

    அந்த ப்ரோமோவில் உள்ள காட்சிகளின் படி இவர் ஆசிரியையாக நடிக்கிறார் என்று அறியப்படுகிறது. நாடகத்தின் பெயரை இன்னும் ஜீ தமிழ் தொலைக்காட்சி முழுவதுமாக வெளியிடவில்லை. நாடகத்தின் சீரியலின் பெயர் ‘அமுதாவும் .....?’ மற்றும் யார் என்ற பெயர் கூறாமல் கேள்வியை கேட்டுமாறு இடைவெளி விட்டுள்ளது. சீரியலின் நாயகனின் பெயர் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் யூகித்து வருகின்றனர்



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    ஆசிரியையாக, பாவாடை தாவணி அணிந்து கொண்டு அழகாக காட்சியளிக்கிறார். கண்மணி மனோகரன் அமுதாவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மாங்கல்ய தோஷம் சீரியலில் நாயகனாக நடித்த அருண் பத்மநாபன் நடிக்கிறார். கலர்ஸ் தமிழ் சேனலின் இரண்டு சீரியலில் நடித்த அருண் பத்மநாபன் தற்போது ஜீ தமிழ் சேனலுக்கு தனது புதிய சீரியல் மூலம் என்ட்ரி ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி