ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு நடந்து முடிந்த திருமணம்! ரசிகர்கள் வாழ்த்து

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு நடந்து முடிந்த திருமணம்! ரசிகர்கள் வாழ்த்து

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலனாக நடிக்கும் சுகேஷூக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகி்ன்றனர்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரைம் சீரியல் பாரதி கண்ணம்மா . கண்ணம்மா - அஞ்சலி திருமண வாழ்க்கையில் தொடங்கிய இந்த சீரியல் பயணம் தற்போது கிளைமேக்ஸில் வந்து நிற்கிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளை நோக்கி வெற்றிக்கரமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் - நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இந்த தொடரில் ஆரம்பத்தில் நடித்த

  ரோஷினி தொடங்கி அருண், அஞ்சலி ஸ்வீட்டி, அகில் என அனைவருமே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டனர். பின்பு பாரதியாக நடிக்கும் அருணை தவிர மூன்று பேருமே சீரியலை விட்டு விலகினர்.

  மனைவி தராததை காதலி தந்தார்.. நடிகர் பப்லு பிரித்விராஜ் ஓபன் டாக்!

  அந்த வகையில் அகிலனாக நடித்த அகிலுக்கு பதிலாக அவர் ரோலில் நடிகர் சுகேஷ் நடித்து வருகிறார். திருமதி ஹிட்லர் சீரியலில் கிஷோர் ரோலில் நடித்து ரீச் ஆனவர் சுகேஷ். இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. இதன் பின்பு தான் விஜய் டிவி பக்கம் வந்தார். கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அகிலன் ரோலில் மிகச் சிறந்த நடிப்பை வெளிபப்டுத்தி வருகிறார். அதுமட்டுமில்லை சினிமா மீது கொண்ட ஆசையால் ஐடி வேலையை பாதியிலேயே விட்டுட்டு நடிப்பில் முழு நேரம் கவனம் செலுத்த தொடங்கியவர் சுகேஷ்.
   
  View this post on Instagram

   

  A post shared by @tamilserial_fc_malaysia
  தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. ரசிகர்கள் இந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர். திருமணத்தை தொடர்ந்து பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் வைக்கப்பட்டது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv