ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாரதி - கண்ணம்மா விவாகரத்து ..லட்சுமி கையில் இருக்கும் கிளைமேக்ஸ்!

பாரதி - கண்ணம்மா விவாகரத்து ..லட்சுமி கையில் இருக்கும் கிளைமேக்ஸ்!

பாரதி - கண்ணம்மா

பாரதி - கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவுக்கும் கூடிய விரைவில் கண்ணம்மா பற்றிய உண்மைகள் தெரிய வரும் .

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை விவாகரத்து செய்ய பாரதி முடிவு எடுத்தால், அதை தடுத்து நிறுத்துபவர் குழந்தை லட்சுமியாக தான் இருக்கும். கிட்டத்தட்ட இந்த பிரச்சனையின் கிளைமேக்ஸை லட்சுமி தான் முடித்து வைப்பார் போல.

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எல்லா உண்மையும் லட்சுமிக்கு தெரிந்து விட்டது. டாக்டர் பாரதி கண்ணம்மாவை விரட்டியது முதல் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கும் கதை வரை அந்த குழந்தைக்கு எல்லா உண்மையும் தெரியும் என்பது தற்போது பாரதி, ஹேமா தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும். நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் சவுந்தர்யாவிடம் அடுத்தடுத்த கேள்விகளை லட்சுமி எடுத்து வைக்க, பதில் சொல்ல முடியாமல் கண்ணீர் விடுகிறார் சவுந்தர்யா. குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கடைசியில் மன்னிப்பும் கேட்டு விடுகிறார்.

கோபி – ராதிகா திருமணம்.. உண்மையை சொல்கிறாரா மூர்த்தி? பாக்கியலட்சுமியில் ட்விஸ்ட்

சவுந்தர்யாவால் அதை மட்டும் தான் செய்ய முடியுமே தவிர, பாரதியையும் கண்ணம்மாவையும் அவரால் சேர்த்து வைக்க முடியாது. அதுமட்டுமில்லை பாரதியிடம் லட்சுமி தான் உன் குழந்தை என்ற உண்மையை கூட அவரால் சொல்ல முடியாது. இத்தனை பிரச்சனையும் தெரிந்தும் பெரிய மனுஷி போல் எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு இருந்த, லட்சுமியின் பக்குவத்தை எண்ணி கண்ணம்மா கண்ணீர் விடுகிறார். கஷ்டப்பட்டாலும் லட்சுமியை நல்ல முறையில் வளர்த்துள்ளேன் என நினைத்து பெருமை படுகிறார்.

இன்றைய எபிசோடில், லட்சுமி, பாரதி - கண்ணம்மா விவாகரத்து பற்றியும் பேசுகிறார். அன்றைய தினம், ஹோட்டலில் பாரதியும் கண்ணம்மாவும் டைவர்ஸ் பற்றி பேசியதை லட்சுமி கேட்டு விட்டார். அதைப்பற்றி இப்போது கண்ணம்மாவிடம் கூறி அழுகிறார். அதே நேரம் லட்சுமி  ஒருபோதும் டாக்டர் அப்பா உன்னை டைவர்ஸ் செய்யமாட்டார்.அவர் அப்படி செய்யவும் நான் அனுமதிக்க மாட்டேன் என்கின்றார். அப்படியென்றால் கூடிய விரைவில் லட்சுமி பற்றி உண்மை பாரதிக்கு தெரிய வருமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இவருக்கு இதே வேலை தான்.. பிரபல சீரியல் நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! ஏன்?

அதுமட்டுமில்லை, உண்மை தெரிந்த பிறகு பாரதியின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? லட்சுமி எப்படி இந்த விஷயத்தை பாரதியிடம் சொல்வார்? டைவர்ஸ் கேஸ் மறுபடியும் கோர்டில் வருமா? என்ற பல கேள்விகளுக்கு வரும் எபிசோடில் விடை கிடைக்கும் என தெரிகிறது. அதே போல், ஹேமாவுக்கும் கூடிய விரைவில் கண்ணம்மா பற்றிய உண்மைகள் தெரிய வரும் என்ற தகவல்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv