Home /News /entertainment /

பாரதி பற்றி வெண்பா சொன்ன பொய்.. கண்ணம்மா சீரியல் எபிசோடில் அடுத்தடுத்த திருப்பம்!

பாரதி பற்றி வெண்பா சொன்ன பொய்.. கண்ணம்மா சீரியல் எபிசோடில் அடுத்தடுத்த திருப்பம்!

பாரதி கண்ணம்மா பாரதி

பாரதி கண்ணம்மா பாரதி

பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில் உண்மை தெரிந்த பாரதி ஷாக்கில் வெண்பாவை முறைக்கிறார்

    பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா அம்மாவின் என்ட்ரி அதிர்ச்சி மட்டுமில்லை சீரியலில் முக்கிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுவரை வெண்பாவுக்கு அம்மா அப்பா என்ற உறவு முறையை காட்டியது இல்லை. அவரின் பெரியப்பாவாக ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரம் சீரியலில் இருந்தது. அவருக்கு மட்டும் தான் பாரதியின் DNA டெஸ்ட் உண்மை தெரியும், அதுமட்டுமில்லை வெண்பா செய்த அனைத்து திருட்டு தனங்களும் அவருக்கு மட்டும் தான் தெரிந்து இருந்தது. அவர், பாரதியிடம் எல்லா உண்மையும் சொல்ல நினைத்த போது, வெண்பா அவருக்கு போதை மருந்து கொடுத்து எப்போதுமே மயக்கத்திலே வைத்து இருந்தார். பின்பு அவர் கதை என்ன ஆனது என தெரியவில்லை.

    பிரியங்காவுக்கு கண்ணீருடன் நன்றி சொன்ன தாமரை.. இதற்கு அவர் தான் காரணமாம்!

    இப்படி இருக்கையில், தற்போது வெண்பாவுக்கு அம்மா இருப்பது போல் சீரியல் பயணிக்க தொடங்கி இருக்கிறது.அதுமட்டுமில்லை அந்த ரோலில் நடிப்பவர் நடிகை ரேகா. நேற்றைய எபிசோடில் இவரின் அறிமுகம் தொடங்கியது. பாரதியின் ஆஸ்பிட்டலுக்கு நேராக வந்தவர், பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார். கோபத்தில் பாரதி, வெண்பாவுக்கு ஃபோன் செய்து உடனே ஆஸ்பிட்டலுக்கு வரச்சொல்கிறார்.

    இதையும் படிங்க.. இனி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-களில் பணம் எடுக்கலாம்! தெரியுமா?

    சில தினங்களுக்கு முன்பு வெண்பாவுக்கு ஃபோன் செய்தவரும் இவர் தான். அந்த ஃபோனை வெண்பா எடுக்கவில்லை, இந்நிலையில் திடீரென்று அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார் வெண்பாவின் அம்மா ஷர்மிளா. அதுமட்டுமில்லை, பாரதிக்கும் வெண்பாவுக்கு கல்யாணம் செய்து வைக்காமல் அமெரிக்கா செல்ல மாட்டென் என்கிறார். ஆஸ்பிட்டலுக்கு வரும் வெண்பா, தனது அம்மா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்லி விட்டு, அவரை வீட்டுக்கு கூப்பிடுகிறார்.



    ஆனால் வெண்பாவுடன் செல்ல மறுக்கும் ஷர்மிளா, சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதி வெண்பாவை காதலிப்பதாக சொன்ன பொய்யை பாரதியிடம் சொல்லி, அது உண்மையா? இல்லையா? என கேட்கிறார். ஷாக்கில் பாரதி, வெண்பாவை முறைக்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. வெண்பாவின் அம்மா என்ட்ரி மட்டுமில்லை, சவுந்தர்யாவின் முன்னாள் காதலர், வேணுவின் கல்லூரி நண்பராக விஜய் என்ற ரோலும் இப்போது சீரியலில் அறிமுகம் ஆகியுள்ளது. இவர் இந்த சிரீயலில் என்ன திருப்பத்தை ஏற்படுத்த போகிறார்? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி