ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தவறை உணர்ந்து கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ தயாராகும் பாரதி!

தவறை உணர்ந்து கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ தயாராகும் பாரதி!

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியல்

"மிச்சம் இருக்குற வாழ்க்கையையும் அவ கூட சேர்ந்து வாழ்ந்துடலாமேன்னு என் மனசு கெடந்து அடிச்சுக்குதும்மா" என்கிறான் பாரதி.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தவறை உணர்ந்து கண்ணம்மாவை பாரதி ஏற்றுக் கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகி, ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

  கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. பாரதிக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதியில்லை என்பதை ஆழமாக நம்ப வைக்கும் வெண்பா, கண்ணாமாவின் வயிற்றில் வளரும் குழந்தை தகாத உறவின் மூலம் உருவானது என்கிறாள். இதை நம்பிய பாரதியும் கண்ணாம்மாவை வெறுத்து ஒதுக்குகிறான்.

  இதற்கிடையே வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

  ஒரு கட்டத்தில் லட்சுமி கண்ணம்மாவின் குழந்தை என பாரதிக்கு தெரிய வருகிறது. அதே போல் பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் ஆகவில்லை என்பதை தெரிந்துக் கொண்ட கண்ணம்மாவுக்கு ஹேமா யார் என்ற கேள்வி எழுகிறது. அதோடு தனக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயமும் தெரிய வருகிறது. இதனால் தனது இன்னொரு குழந்தை ஹேமாவாக இருக்குமோ என்ற சந்தேகமும் தொற்றிக் கொள்கிறது.

  இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பாரதியை பார்க்க வந்த பெண் ஒருவர், “எங்க அண்ணன் ரொம்ப தங்கமானவன். என்னைக்கு எங்க அண்ணி மேல சந்தேக புத்தி வந்துச்சோ, அன்னைக்கே அவங்க வாழ்க்கை நரகமாகிடுச்சு” என்கிறார். இதைக்கேட்டு உணர்ச்சி வசப்பட்டு பாரதி அழ, அங்கு வரும் வெண்பாவிடம், “கண்ணம்மா ரொம்ப நல்லவளோ? இத்தனை வருஷமா நான் தான் அவள தப்பா நினைச்சிட்டு இருக்கேனோன்னு தோணுது” என்கிறான். “இவன் கண்ணம்மாவை நல்லவன்னு நம்ப ஆரம்பிச்சிட்டானே, இனிமே இவன நம்மளால தடுக்க முடியாதே” என உள்ளுக்குள் பதறுகிறாள் வெண்பா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதே குற்ற உணர்ச்சியில் வீட்டுக்கு வரும் பாரதி தனது அம்மாவிடம், “கண்ணம்மா தப்பே செய்யாதவளா ஏன் இருக்கக் கூடாது? என் சைடுலயும் தப்பு இருக்கலாம் இல்லம்மா. இத்தனை வருஷமா நான் நம்பிட்டுருக்கது ஒரு பொய்யான விஷயமா இருக்கலாம் இல்ல. மிச்சம் இருக்குற வாழ்க்கையையும் அவ கூட சேர்ந்து வாழ்ந்துடலாமேன்னு என் மனசு கெடந்து அடிச்சுக்குதும்மா” என்று சொல்லி அழுகிறான்.

  ' isDesktop="true" id="565551" youtubeid="7bKtYQXW9cI" category="television">

  இதைக்கேட்ட, பாரதியின் அம்மா செளந்தர்யா, அப்பா வேணு, தம்பி அகில் மற்றும் அவனது மனைவி அஞ்சலி மகிழ்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். இதைப் பார்த்த பாரதி கண்ணம்மா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தருணம் வந்துவிட்டதாக கமெண்டுகளில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial, Vijay tv