• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதி கண்ணம்மா: இன்னும் எத்தனை நாளுக்கு தான் இந்த போராட்டமோ?

பாரதி கண்ணம்மா: இன்னும் எத்தனை நாளுக்கு தான் இந்த போராட்டமோ?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

சீரியலில், பாரதி வெண்பாவிற்கு ஜாமீன் வாங்க செல்வதாக கூறுகிறார்.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்தடுத்த ட்விஸ்டுகளால் ரசிகர்களை திணறடித்து வருகிறது.

    மனவருத்தம் காரணமாக பிரிந்து இருக்கும் பாரதியும், கண்ணாம்மாவும் அண்மைக்காலமாக மீண்டும் சேர்ந்து பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது வெண்பாவுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கும் வெண்பா, அதற்கான சூழ்ச்சிகளை விடாமல் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

    அதேநேரத்தில், பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் மனம் வருத்தம் ஏற்பட்டு பிரிந்ததில் இருந்து, கண்ணம்மாவின் பக்கமே இருந்தார் சவுந்தர்யா. பாரதி தவறு செய்கிறான் என்பதையும் நன்கு அறிந்திருந்தார். கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட சவுந்தர்யா, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவளுக்கு தெரியாமல் ஒரு குழந்தை எடுத்துக்கொண்டு வந்து ஹேமா என பெயரிட்டு தானே வீட்டில் வளர்த்து வருகிறார். பாரதியும், ஹேமா தன்னுடைய மகள் என்பதை அறியாமல் அவள் மீது பாசமழை பொழிந்து வளர்த்தான். கண்ணம்மாவும், தனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை என லட்சுமியை வளர்த்து வந்தார்

    ஆனால், உன்னுடைய 2வது குழந்தை யார் என தெரிய வேண்டுமானால், நீ டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்துபோட வேண்டும் என வெண்பா கூறியதால் கண்ணம்மாவிற்கு தனது இரண்டாவது குழந்தை குறித்த சந்தேகம் எழுந்தது. தன்னுடைய குழந்தைக்காக டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடவும் கண்ணம்மா துணிந்த நிலையில் அந்த நேரத்தில் சவுந்தர்யா எதிர்பாராதவிதமாக வந்ததையடுத்து வேறு வழியின்றி ஹேமா தான் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை என்ற உண்மையை போட்டுடைத்து விட்டார். இதனால் வெண்பாவின் மீது கடுப்பான கண்ணம்மா, அவர் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய இருந்ததை போலீசில் தெரிவித்து அவரை சிறைக்கு செல்ல வைத்து விட்டார்.



    இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கண்ணம்மாவிற்கு பாரதி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸை பார்த்து கண்ணம்மா அழுகிறார் , பின் ஒரு முடிவுக்கு வரும் கண்ணம்மா, தனது மாமியாரிடம் சென்று பாரதி விவாகரத்து பெற்றால் ஹேமாவை நான் அவரிடம் விட மாட்டேன், உங்கள் வீட்டிற்கும் அனுப்ப மாட்டேன் என அதிரடியாக கூறுகிறார். மறுபுறம் இந்த விஷயத்தில் கண்ணம்மாவிற்கு உதவிகள் செய்ய கூடாது என பாரதி, சவுந்தர்யாவிடம் சத்தியம் வாங்கியுள்ளார். இதனால் அவர் என்ன செய்வதென்ற விவரம் தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பாரதி வெண்பாவிற்கு ஜாமீன் வாங்க செல்வதாக கூறுகிறார். இதனை கேட்டு கடுப்பாகும் சவுந்தர்யா நீ வெண்பாவிற்கு உதவி செய்தால் நான் கண்ணம்மாவிற்கு உதவி செய்வேன் என கூறும் காட்சிகள் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: