Home /News /entertainment /

பகலில் சீரியல் இரவில் இப்படியொரு வேலை... பாரதி கண்ணம்மா வினுஷா

பகலில் சீரியல் இரவில் இப்படியொரு வேலை... பாரதி கண்ணம்மா வினுஷா

வினுஷா தேவி

வினுஷா தேவி

இந்த சீரியலில் முதலில் கண்ணம்மாவாக நடித்து வந்தவர் ரோஹினி ஹரிப்ரியன். பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகினார்.

    பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் வினுஷா தேவி இரவில் செய்யும் வேலை குறித்த விஷயத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் நடிகர் அருண் பிரசாத்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட்டாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.

    இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

    பின்னர் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயத்தை மருத்துவர் மூலம் தெரிந்துக் கொண்ட கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை தேடி அலைகிறாள். பின்னர் ஒருவழியாக தனது இன்னொரு குழந்தை ஹேமா என்ற விஷயம் அவளுக்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் தனது அப்பா யார் என நச்சரித்து வருகிறாள் லட்சுமி. இந்த உண்மைகள் எப்போது வெளிப்படும் என்ற எதிர்பார்ப்பில் தொடர்ந்து பாரத்தி கண்ணம்மா சீரியலை பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரியும்... மேடை நாடக நடிகர் ரஜினி தெரியுமா?

    இந்த சீரியலில் முதலில் கண்ணம்மாவாக நடித்து வந்தவர் ரோஹினி ஹரிப்ரியன். பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகினார். இதையடுத்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருபவர் வினுஷா தேவி.

    ரிலீஸ் தேதியுடன் நடிகர்களின் லுக்கை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு!

    இவர் பகலில் ஷூட்டிங், இரவில் ஐடி நிறுவனத்தில் பணி என படு பிஸியாக இருப்பதாக சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் பாரதி கண்ணம்மா அருண் பிரசாத்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி