Home /News /entertainment /

பிறந்த நாள் புகைப்படங்களை வெளியிட்ட புதிய கண்ணம்மா... பொழியும் லைக்ஸ் மழை

பிறந்த நாள் புகைப்படங்களை வெளியிட்ட புதிய கண்ணம்மா... பொழியும் லைக்ஸ் மழை

வினுஷா தேவி

வினுஷா தேவி

ரோஷினியை தாண்டி, புதிய கண்ணம்மா தனது இடத்தை பிடிப்பாரா? எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. எப்போதும் டிஆர்பி-யில் டாப் வரிசையில் இருக்கும் இந்த சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்த ரோஷினிக்கு எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ரோஷினி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்களை பெரிதும் கவலையடைய செய்தது.

    ரோஷினிக்கு பதிலாக அவரை போலவே இருக்கும் ஒருவரை தேடிப் பிடித்தது சீரியல் குழு. அவர் தான் தற்போது சீரியலில் கண்ணம்மாவாக நடித்து கொண்டிருக்கும் வினுஷா தேவி. இருப்பினும், ரோஷினியின் விலகல் சீரியலுக்கு பின்னடைவையே ஏற்படுத்தியது. ரோஷினியின் கடைசி வார எபிசோட் கூட டிஆர்பி-யில் 7ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இருப்பினும் சீரியலுக்கான மவுசு பெரிதாக சரியவில்லை. தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வினுஷா தேவிக்கும் மக்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

    டஸ்கி மாடலான வினுஷா, ரோஷினி போன்றே தோற்றம் தருகிறார். வினுஷாவின் சொந்த ஊர் அரக்கோணம். வள்ளியம்மாள் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர், ‘சுந்தரி’ சீரியலின் நாயகி கேபிரியல்லவோடு இணைந்து பல மைம் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். மாடலாக இருந்தாலும், இவர் ஏற்கெனவே டிக் டாக்கில் மிகவும் பிரபலம். அதிலும், திமிரு படத்தில் வரும் ஷ்ரேயா ரெட்டி கதாபாத்திரத்தை அப்படியே இமிடேட் செய்து வைரலானார்.

    இதனைத் தொடர்ந்து ஏராளமான போட்டோஷூட் செய்து பிஸியான மாடலாக மாறினார். மக்கள் மனதில் இடம் பிடிக்க சின்னத்திரை எளிய வழி என்றாலும், ஏற்கனவே கண்ணம்மாவாக மக்களின் மனதில் முத்திரை பதித்த ரோஷினியை தாண்டி, புதிய கண்ணம்மா தனது இடத்தை பிடிப்பாரா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மாடலிங்கிற்கு முன்னதாக டிக்டாக் மூலம் பிரபலமடைந்த இவர், தனது சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

    அந்த வகையில், வினுஷா தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. வினுஷா பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தான் முதன் முதலில் திரைத்துறையில் நுழைந்துள்ளார் என்பது உண்மையில்லை.



     




    View this post on Instagram





     

    A post shared by Vinusha Devi (@vinusha_devi)






    இவர் ஏற்கனவே, கேபிரியல்லா, டிக் டாக் ஃபேம் அக்ஷய் ஆகியோருடன் இணைந்து விரைவில் வெளியாகவிருக்கும் N4 எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வினுஷாவிற்கு விவசாயம் என்றால் மிகவும் பிடிக்குமாம். தற்போது விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும் கதைக்களத்தில் வினுஷாவின் நடிப்பு மக்களை சீக்கிரம் கவரும் என்று தான் சொல்ல வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி