முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இனி வெண்பா எனக்கு வேண்டாம்.. முற்றுப்புள்ளி வைத்த டாக்டர் பாரதி!

இனி வெண்பா எனக்கு வேண்டாம்.. முற்றுப்புள்ளி வைத்த டாக்டர் பாரதி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் அடுத்து வெண்பா எடுக்க போகும் முக்கிய முடிவு என்ன?

  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடு புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் வெண்பாவின் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டாக்டர் பாரதி.

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் திருமணத்தை அவரின் அம்மா ஷர்மிளா முடிவு செய்துவிட்டார். ரோகித் தான் வெண்பாவுக்கு ஏற்ற மாப்பிள்ளை என்பதில் உறுதியாக இருக்கும் அவர், இதற்காக பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார். அந்த பார்டிக்கு சவுந்தர்யா கண்ணம்மா, பாரதி ஆகியோரையும் அழைக்கிறார். இந்த பார்ட்டியில் வெண்பா - ரோகித் கல்யாணத்தை பற்றி அனைவருக்கும் அறிவிக்கலாம் என முடிவு செய்கிறார். ஏற்கனவே ரோகித்துக்கு கண்ணம்மா தான்  பாரதியின் முதல் மனைவி என்பது தெரிந்து விட்டது. இருவரும் ஒரே ஆஸ்பிட்டலில் வேலை செய்வதை கூட ரோகித் பயங்கரமாக கலாய்த்து இருந்தார்.

உண்மையை போட்டுடைத்த வருண்.. சத்யாவுடன் சேர போகும் நேரம்!

இந்நிலையில் தற்போது  வெளியாகி இருக்கும் புரமோவில் ரோகித் தான் தன்னுடைய மாப்பிள்ளை என்பதை ஷர்மிளா அறிவிக்கிறார். அரங்கத்தில் கைத்தட்டல்கள் பறக்கின்றன. கண்ணம்மாவுக்கு சந்தோஷம் தாங்கல. ஆனால் வெண்பா இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என போட்டு உடைக்கிறார். பாரதியை தான் கல்யாணம் செய்வேன் எனவும், எல்லோர் முன்பும் சொல்லி அழுகிறார். இதை சற்று எதிர்பார்க்காத சவுந்தர்யா கோபத்தில் வெண்பாவை முறைக்கிறார்.

' isDesktop="true" id="758688" youtubeid="9c0W1oBY7Vk" category="television">

கண்ணம்மாவின் முகமும் மாறுகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்கத நேரத்தில் மைக்கை வாங்கி பேசும் பாரதி, இந்த வெண்பாவை கல்யாணம் செய்து கொள்வதில் சம்மதம் இல்லை என்கிறார்., அதுமட்டுமில்லை இனி வெண்பா எனக்கு வேண்டாம் என்றும் முற்றுப்புள்ளி வைக்கிறார். பாரதியின் இந்த பதிலை கேட்டு ஷாக் ஆகிறார் வெண்பா.  குறிப்பாக கண்ணம்மா, ரோகித் முன்னிலையில் பாரதி இப்படி சொன்னதை வெண்பாவால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அடுத்து வெண்பா எடுக்க போகும் முக்கிய முடிவு என்ன? என்பது வரும் எபிசோடில் தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv