கணவரை கிட்டத்தட்ட 2 வருடம் பிரிந்திருந்த வெண்பா.. அவரே சொன்ன ’கதைப்போமா’ கதை!

பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா

எனது கணவரை நான் இந்த பிரச்சனையால பல இடங்களில் விட்டுக்கொடுத்து பேசி இருக்கிறேன்

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா தான் சோஷியல் மீடியாவின் தற்போதைய ஹாட் டாப்பிக்.

  நிறைமாத கர்ப்பிணியான இவரின் ஃபோட்டோஷூட் கடந்த சில வாரங்களாக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் துவண்டு போகாத அவர் தைரியமான பதில்களை கொடுத்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இவரின் கணவரும் இவருக்கு துணையாக நின்று மனைவிக்கு பக்க பலமாக இருக்கிறார். இவர்களின் திருமணம் காதல் திருமணம் ஆகும்.

  ஃபரினா - ரகுமான் மிகவும் விருப்பப்பட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் பல பிரச்சனைகளால் இருவரும் கிட்டத்தட்ட 2 வருடங்களாக பிரிந்து இருந்துள்ளனர். கல்யாணம் ஆன புதுசில் ஃபரினா தனது கணவருடன் சேர்ந்து எந்த புகைப்படத்தையும் வெளியிடாமல் தவிர்த்து வந்தார். இதனால் ரசிகர்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கும் சேர்த்து தான் சில மாதங்களுக்கு முன்பு யூடியூப் ஒன்றில் அளித்த பேட்டியில் இதுக்குறித்து பேசி இருந்தார்.  அதாவது, கல்யாணம் ஆன சில மாதங்களிலே ஃபரினாவும் அவரது கணவர் ரகுமானும் பிரிந்து இருந்துள்ளனர். தனித்தனியாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், கதைப்போமா மந்திரத்தை யூஸ் பண்ணி இருவரும் ஒருவருகொருவர் மனம் விட்டு பேசி இணைந்துள்ளனர். இருவருக்கும் இடையேயான பிரச்சனை தீர்ந்த்து மீண்டும் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இதை மிகவும் உணர்பூர்வமாக ஃபரினா பதிவு செய்திருந்தார். “எனது கணவரை நான் இந்த பிரச்சனையால பல இடங்களில் விட்டுக்கொடுத்து பேசி இருக்கிறேன். ஆனால் அவர் என்னை யாரிடத்திடத்திலும் விட்டுகொடுத்ததில்லை இந்த புரிதல் தான் எங்களை” மீண்டும் இணைத்தது. கல்யாணவர்கள், காதலர்கள் உங்களுக்கு இடையே பிரச்சனையை பேசி தீர்வைக் காணுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதுதான் அந்த கதைப்போமா கதை.

  வெண்பாவின் ஃபோட்டோஷூட்டுக்கு பின்பு அவர் குறித்த அனைத்து வீடியோக்களும் இனையத்தில் வைரலாகி வருகிறது அதில் இந்த வீடியோவும் முக்கியமான ஒன்று.
  Published by:Sreeja Sreeja
  First published: