• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா வெண்பா?

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா வெண்பா?

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா வெண்பா

விஜய் டிவி-யின் பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்தடுத்த ட்விஸ்டுகளால் ரசிகர்களை திணறடித்து வருகிறது.

  • Share this:
    சின்னத்திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சீரியலாக பாரதி கண்ணம்மா உள்ளது. டி.ஆர்.பியில் கலக்கி வரும் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு அடுத்தபடியாக புகழ் வெளிச்சத்தில் இருப்பவர் ’வெண்பா’ தான். இவர் செய்யும் சூழ்ச்சிகளாலேயே சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மா மீது இரக்கப்படுபவர்கள் அனைவரும் நிச்சயமாக வெண்பாவை கடுமையாக திட்டித் தீர்ப்பார்கள்.

    ஏனென்றால், வெண்பாவின் சூழ்ச்சியால், பாரதி தேவையில்லாமல் கண்ணாம்மாவை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்திவிட்டுவிட்டான். இந்த சீரியலில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற ஆசையில், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே களங்கத்தை மூட்டி விடுவதில் இருந்து அதற்கு இடையூறாக யார் வந்தாலும் அதை தடுப்பது வரை அனைத்து வேலைகளையும் பார்க்கும் கொடூர கதாபாத்திரத்தில் செமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே ஃபரினா கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

    மேலும் ’கர்ப்பமாக இருப்பதால் வயிறு வெளியே தெரிய தொடங்கியிருக்கு, அதனால் சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன் என இயக்குநரிடம் நானாக சென்று கூறினேன். ஆனால், நான் கூறிய காரணத்தை ஏற்க மறுத்த இயக்குநர், நான் பாத்துக்கிறேன், நீங்க போங்க என கேஷ்வலாக சொல்லிவிட்டார். அதனால், இப்போதைக்கு சீரியலில் இருந்து விலக மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்தடுத்த ட்விஸ்டுகளால் ரசிகர்களை திணறடித்து வருகிறது. கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை பிச்சை எடுத்து வருவதாகவும், பாரதியை டைவர்ஸ் செய்ததால் தான் இதுகுறித்த உண்மையை கூறுவேன் என்றும் வெண்பா மிரட்டி வந்தார் இதனை அறிந்த சவுந்தர்யா, ஹேமா தான் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை என்ற உண்மையை போட்டுடைத்து விடுகிறார். இதனால் வெண்பாவின் மீது கடுப்பான கண்ணம்மா, அவர் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய இருந்ததை போலீசில் தெரிவித்து அவரை சிறைக்கு செல்ல வைத்து விட்டார்.

    தற்போது வெண்பா சிறையில் இருக்குமாறு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அவர் சீரியலில் இருந்து விலக இருப்பதால் தான் சீரியலில் இந்த மாற்றம் என தகவல் வெளியானது. இந்தநிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வேலைக்காரி கேரக்டரில் நடிக்கும் புஷ்பா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, மிஸ் யூ ஃபரீனா என குறிப்பிட்டுள்ளார். இதனால் உண்மையில் ஃபரீனா சீரியலில் இருந்து விலகி விட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. முன்னதாக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பாரதியின் தம்பியாக அகிலன் கதாபாத்திரத்தில் நடித்தவர் சீரியலில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து கண்ணம்மாவும் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது வெண்பாவும் வெளியேற இருப்பது இந்த சீரியலில் சரிவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: