• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bharathi Kannamma: வயிற்றில் மருதாணியுடன் பாரதி கண்ணம்மா வெண்பா! கவனம் பெறும் புகைப்படம்...

Bharathi Kannamma: வயிற்றில் மருதாணியுடன் பாரதி கண்ணம்மா வெண்பா! கவனம் பெறும் புகைப்படம்...

ஃபரீனா

ஃபரீனா

வெண்பாவின் சூழ்ச்சியால் தான் பாரதியும், கண்ணம்மாவும் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

  • Share this:
'பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ஃபரீனா வயிற்றில் மருதாணியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது.

தொகுப்பாளினியாக இருந்து சீரியல் நடிகையானவர் ஃபரீனா ஆசாத். இவர் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திருமணமான பாரதியை எப்படியாவது அடைந்தே தீர வேண்டுமென பல வில்லத்தனங்களை செய்து வரும் வெண்பா கதாபாத்திரம், பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சொல்லப்போனால் வெண்பாவின் சூழ்ச்சியால் தான் பாரதியும், கண்ணம்மாவும் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இரட்டை குழந்தையைப் பெற்றெடுத்த கண்ணம்மாவின் குழந்தைகளும் தனித்தனியே வளர்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பா தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது அவர் வயிற்றில் மருதாணியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் படம் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: