முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மகனை பெற்றெடுத்த பாரதி கண்ணம்மா வெண்பா - குவியும் வாழ்த்துகள்!

மகனை பெற்றெடுத்த பாரதி கண்ணம்மா வெண்பா - குவியும் வாழ்த்துகள்!

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா வெண்பாவிற்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  • Last Updated :

’பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை வெண்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் டாக்டர் வெண்பா என்ற வேடத்தில் நடிக்கும் ஃபரினா ஆசாத், ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும், தான் விரும்பும் பாரதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல வில்லத்தனங்களை செய்து வருகிறார்.

பாரதியும் கண்ணம்மாவும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருப்பதற்கு வெண்பாவாக நடிக்கும் ஃபரீனாவே காரணம். இப்போதும் அவர்களை சேர விடாமல் தொல்லைகளைக் கொடுத்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா, சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைத் தெரிவித்தார். அதோடு தனது கர்ப்ப கால புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டார். இதையடுத்து ஃபரீனா சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர். இதற்கு பதில் தெரியாத நிலையில், தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஃபரீனா.
 
View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)அதாவது தனக்கு மகன் பிறந்திருக்கும் விஷயம் தான் அது. இதையடுத்து ஃபரீனாவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial