• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குழந்தை பிறந்த கையோடு மீண்டும் பாரதி கண்ணம்மாவில் வெண்பா!

குழந்தை பிறந்த கையோடு மீண்டும் பாரதி கண்ணம்மாவில் வெண்பா!

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா வெண்பா

‘உங்களுடைய அன்புக்குக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. நானும் குழந்தையும் நலமுடன் இருக்கிறோம். இது ஒரு சுகப்பிரசவம். நான் விரைவில் திரும்பி வருவேன்’ என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருக்கிறார்.

  • Share this:
    தான் விரைவில் திரும்பி வருவேன் என பாரதி கண்ணம்மா வெண்பா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் டாக்டர் வெண்பா என்ற வேடத்தில் நடிக்கும் ஃபரினா ஆசாத், ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும், தான் விரும்பும் பாரதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல வில்லத்தனங்களை செய்து வருகிறார்.

    பாரதியும் கண்ணம்மாவும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருப்பதற்கு வெண்பாவாக நடிக்கும் ஃபரீனாவே காரணம். இப்போதும் அவர்களை சேர விடாமல் தொல்லைகளைக் கொடுத்து வருகிறார்.

    சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா, சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைத் தெரிவித்தார். அதோடு தனது கர்ப்ப கால புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டார். இதையடுத்து ஃபரீனா சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில் தனக்கு மகன் பிறந்திருக்கும் விஷயத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் ஃபரீனா.

    இதையடுத்து, ‘உங்களுடைய அன்புக்குக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. நானும் குழந்தையும் நலமுடன் இருக்கிறோம். இது ஒரு சுகப்பிரசவம். நான் விரைவில் திரும்பி வருவேன்’ என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருக்கிறார்.

    Venba Farina azad Bharathi Kannamma, Bharathi Kannamma Venba Farina azad blessed with baby boy, bharathi kannamma venba normal delivery, பாரதி கண்ணம்ம வெண்பா நார்மல் டெலிவரி, Bharathi Kannamma Venba son, Bharathi Kannamma venba delivery, farina azad son, farina azad baby, farina azad delivery, Bharathi Kannamma venba left, Bharathi Kannamma Farina Azad photo, bharathi kannamma, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ, Bharathi Kannamma venba pregnant, Bharathi Kannamma venba pregnancy photo, பாரதி கண்ணம்மா வெண்பா கர்ப்பகால புகைப்படம், venba latest photoshoot, bharathi kannamma venba photoshoot
    வெண்பா ஃபரீனா


    இதன் மூலம் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஃபரீனா நடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: