பாரதி கண்ணம்மாவில் இருந்து வெளியேற ’வெண்பா’ முடிவு - தடைபோட்டவர் யார் தெரியுமா?

ஃபரினா

வெண்பாவின் சூழ்ச்சியால், பாரதி தேவையில்லாமல் கண்ணாம்மாவை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்திவிட்டுவிட்டான்.

  • Share this:
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக கலக்கி வரும் ஃபரீனா ஆசாத், கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலக முடிவு செய்ததற்கு இயக்குநர் தடை போட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

சின்னத்திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சீரியலாக பாரதி கண்ணம்மா உள்ளது. டி.ஆர்.பியில் கலக்கி வரும் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு அடுத்தபடியாக புகழ் வெளிச்சத்தில் இருப்பவர் ’வெண்பா’ தான். இவர் செய்யும் சூழ்ச்சிகளாலேயே சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மா மீது இரக்கப்படுபவர்கள் அனைவரும் நிச்சயமாக வெண்பாவை கடுமையாக திட்டித் தீர்ப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏனென்றால், வெண்பாவின் சூழ்ச்சியால், பாரதி தேவையில்லாமல் கண்ணாம்மாவை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்திவிட்டுவிட்டான். இப்போது மெல்ல மெல்ல கண்ணம்மாவை பாரதி நெருங்க வேண்டிய சூழல் வந்திருந்தாலும், அதனையும் தன்னுடைய சூழ்ச்சியால் முறியடித்துக் கொண்டே இருக்கிறாள் வெண்பா. அவளைப் பொறுத்தவரை பாரதி, கண்ணம்மாவுடன் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறாள்.

இப்படி வில்லத்தனங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் வில்லி வெண்பாவாக நடித்துக் கொண்டிருப்பவர் ஃபரீனா ஆசாத். இவர் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். சீரியல் உச்சக்கட்ட பரபரப்பில் செல்லும்போது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஏதேனும் ஒரு புகைப்படத்தை போட்டு, மேலும் ஒரு டிவிஸ்டை கொடுத்துவிடுவார். இதனால், லட்சக்கணக்கானோர் ஃபரீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்கின்றனர்

நெகடிவ் ரோலில் நடித்து வருவதால், விமர்சனங்கள் எழாமல் இல்லை. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஃபரீனாவை திட்டுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களையும் தனக்கே உரிய பாணியில் அசால்டாக எதிர்கொண்டு வருகிறார். சில சூடான பதிலடிகளையும் கொடுத்த பரபரப்பையும் ஏற்படுதும் ஃபரீனா, இப்போது கர்ப்பமாக இருக்கிறார். தாய்மை அடைந்தாலும் சீரியலில் தொடர்ந்து நடிக்கும் அவரை, சில நெட்டிசன்கள் கேலி செய்துள்ளனர்.

அப்போது, அவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு, சீரியலில் ஏன் தொடர்ந்து நடிக்கிறேன்? என்ற விளக்கத்தையும் கொடுத்துள்ளார். ’கர்ப்பமாக இருப்பதால் வயிறு வெளியே தெரிய தொடங்கியிருக்கு, அதனால் சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன் என இயக்குநரிடம் நானாக சென்று கூறினேன். ஆனால், நான் கூறிய காரணத்தை ஏற்க மறுத்த இயக்குநர், நான் பாத்துக்கிறேன், நீங்க போங்க என கேஷ்வலாக சொல்லிவிட்டார். அதனால், இப்போதைக்கு சீரியலில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

Also read... வாய்ப்புகளை இழந்தது ஏன் தெரியுமா? ரகசியம் உடைத்த இளம் நடிகை ஹிமா பிந்து!

’வெண்பா’ கதாப்பாத்திரத்தில் புகுந்து விளையாடி வரும் ஃபரீனா, இப்போதைக்கு சீரியலுக்கு என்டுகார்டு போடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அண்மையில், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அகில் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த அகிலன் விலகினார். விஷால் உள்ளிட்டோரின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள அவர், தேதி பிரச்சனை காரணமாக சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுகேஷ் சந்திரசேகரன் என்பவர் புதிதாக நடிக்க உள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: