Home /News /entertainment /

பாரதி கண்ணம்மா சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்த நடிகை.. ரசிகர்கள் ஹேப்பி!

பாரதி கண்ணம்மா சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்த நடிகை.. ரசிகர்கள் ஹேப்பி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போகிறதா?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் அம்மா ஷர்மிளா ரோலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ரேகா. இன்றைய எபிசோடில் ஷர்மிளாவாக  அமெரிக்காவில் இருந்து திரும்ப வந்து வெண்பாவுக்கு ஷாக் கொடுக்கிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியல் முடிய இருப்பதாக ஒருபக்கம் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இப்படி இருக்கையில் சீரியலின் கதையும் படு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பாரதி அப்பா வேணுக்கு உடம்பு சரியில்லை. அவருக்கு ரத்தம் தொடர்பான பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அவர் உடைந்து போகிறார். உயிர் வாழ போகும் நாளை எண்ண தொடங்கவிட்ட வேணு இந்த விஷயத்தை குடும்பத்திடம் இருந்து மறைத்து விடுகிறார்.



    கதிரை விட்டு கொடுக்காத மூர்த்தி.. கடைசி நேரத்தில் செய்த செயல்!

    இது ஒருபுறம் இருக்க லட்சுமி, தனக்கு எல்லா உண்மையும் தெரியும் என்பதை பாரதியிடம் சொல்லிவிட்டார். இந்த அதிர்ச்சி பாரதிக்கு அடுத்த இடி போல் விழுகிறது. அதே போல் ஹேமா குறித்த உண்மையும் பாரதிக்கு தெரிந்து விட்டது. இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் கதை வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில்,  இருக்கும் ஒட்டுமொத்த கோபத்தையும் வெண்பாவிடம் காட்டுகிறார் செளந்தர்யா. கண்ணம்மாவுக்கு வெண்பா விஷ ஊசி போட்ட விஷயம் பிறந்த நாள் விழாவில் தான் செளந்தர்யாவுக்கு தெரிய வந்தது. அந்த கோபத்தை இன்றைய எபிசோடில் காட்டி விடுகிறார் செளந்தர்யா. வெண்பா கன்னத்தில் பளார் என அடி கொடுக்கிறார்.

    அதன் பின்பு வெண்பாவுக்கு அடுத்த அதிர்ச்சியை தருகிறார் அவரின் அம்மா ஷர்மிளா. அமெரிக்கா சென்று இருந்த ஷர்மிளா மீண்டும் இந்தியாவுக்கு வந்து விட்டார். அவரை பார்த்ததும் வெண்பாவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. விஷயம் தெரிந்து வீட்டுக்கு ஓடி வருகிறார் செளந்தர்யா. ஷர்மிளாவிடம் வெண்பாவுக்கு உடனே கல்யாணம் செய்யலாம் என்கிறார். வெண்பாவுக்கு கோபம் வருகிறது. ஷர்மிளா கல்யாணம் வேண்டாம் நிச்சயதார்த்தம் செய்யலாம் என்கிறார்.  கடைசியில் ரோகித் - வெண்பா நிச்சயதார்த்தம் உறுதி செய்யப்படுகிறது. சில மாதங்களாக  விறுவிறுப்பு இல்லாமல் சென்ற சீரியலை வெண்பா அம்மாவான நடிகை ரேகாவின் என்ட்ரி சுறுசுறுப்பாக மாற்றியது. இந்நிலையில் இப்போது மீண்டும் பாரதி கண்ணம்மா தொடரில் ஷர்மிளாவாக ரேகா என்ட்ரி கொடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி