பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வார எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. இதில் ரசிகர்களுக்கு முக்கியமான ட்விஸ்டும் காத்துக் கொண்டிருக்கிறது.
பாரதி - கண்ணம்மா சீரியலில் போதும் போதும் என்ற அளவுக்கு இயக்குனர் ட்விஸ்ட் தந்துவிட்டார். சீரியலை முடித்தால் போதும் என ரசிகர்கள் இருக்க, அடுத்த ட்விஸ்ட் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பிரிந்து இருக்கும் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் 2வது திருமணம் நடக்க போகிறது. அதை நடத்தி வைக்க போவது செல்ல மகள்களான ஹேமாவும் லட்சுமியும் தான். ஏற்கெனவே பாரதிக்கு 2வது
திருமணம் செய்து வைக்க போவதாக ஹேமா கூறி இருந்தார். ஆனால் யாரை அவர் 2வது அம்மாவாக தேர்வு செய்து இருக்கிறார் என்பது பாரதிக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது அந்த ரகசியத்தை பாரதிக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த ஸ்கூல் பேரண்ட்ஸ் முன்னாடியும் ஹேமா சொல்லிவிடுகிறார்.
மீண்டும் முத்தரசுடன் சேர போகிறாரா ஸ்வேதா? ’யாரடி நீ மோகினி’ சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!
பாரதியும் கண்ணம்மாவும் கணவன் - மனைவி என்பதும் பல பிரச்சனையால் இருவரும் பிரிந்து இருப்பது லட்சுமிக்கு மட்டும் தான் தெரியும் . அதே போல் லட்சுமிக்கு எல்லாம் உண்மையும் தெரிந்து விட்டது என்ற ரகசியம் டாக்டர் பாரதியை தவிர மொத்த குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது. இப்படி இருக்கையில் இந்த வார சீரியல் புரமோ ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் ஹேமா அதிர்ச்சியான தகவலை மேடையில் பகிர்கிறார். பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெறும் ஹேமாவுக்கு ஆண்டு விழாவில் பரிசு கொடுக்கப்படுகிறது. அந்த விழாக்கு பாரதி, கண்ணம்மா லட்சுமி, வேணு, சவுந்தர்யா அனைவரும் வருகின்றனர்.
அப்போது மேடையில் பரிசு வாங்கும் போது தனது அப்பாவை கூப்பிடுகிறார்.கூடவே சமையல் அம்மா என்று கண்ணம்மாவையும் மேடைக்கு அழைக்கிறார். அப்போது தான் பாரதிக்கு 2 வது கல்யாணம் செய்து வைக்க போவதையும் ஹேமா சொல்கிறார். எல்லோரும் ஆச்சரியத்தில் ஹேமாவை பார்கின்றனர். ஏற்கெனவே வெண்பாவுக்கு யாருடன் கல்யாணம்? என்று தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாய் இருக்கும் நிலையில் இப்போது பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் 2வது திருமணம் என்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.