கடைசி வரை பாரதியை DNA டெஸ்ட் எடுக்க விடாமல் செய்த வெண்பா... செளந்தர்யாவுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சா?

பாரதி கண்ணம்மா சீரியல்

உண்மை தெரியும் என அறிந்து கொண்ட பாரதி மொத்த குடும்பத்தையும் வெறுக்கிறான்

 • Share this:
  லட்சுமி, கண்ணம்மாவின் மகள் தான் என்ற உண்மை தெரிந்து செம்ம கோபத்தில் இருக்கும் பாரதியை மீண்டும் தூண்டிவிட்டு கடைசி வரை DNA டெஸ்ட் எடுக்கவிடாமல் சதி செய்கிறாள் வெண்பா.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தினம் தினம் புது புது ட்விஸ்டுகள் உடன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இத்தனை நாளாக செளந்தர்யா பார்த்து பார்த்து மறைத்து வைத்திருந்த உண்மை, லட்சுமி கண்ணம்மாவின் பொண்ணுதான் என்பது. ஆனால் அதை ஒரு டையிரியை வைத்து பாரதி கண்டுப்பிடித்து விட்டான். லட்சுமியை உண்மை தெரியும் வரை வீட்டுக்கு அனுப்ப போவதில்லை என சொல்லிவிட்டு தனது வீட்டிலே  இருக்க வைக்கிறான். குழந்தையைத் தேடி வரும் கண்ணம்மாவோ உண்மையை சொல்ல முடியாமல் அங்கிருந்து போகிறாள். தன்னை தவிர தன் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இந்த உண்மை தெரியும் என அறிந்து கொண்ட பாரதி மொத்த குடும்பத்தையும் வெறுக்கிறான். அதுமட்டுமில்லை இதைப் பற்றி வில்லி வெண்பாவிடம் கூறி புலம்புகிறான்.

  வழக்கம் போல் வெண்பா, பாரதியிடம் கண்ணம்மாவிடம் போட்டு கொடுக்கிறாள். “ஒருவேலை பாரதி லட்சுமி கண்ணம்மா பொண்ணுன்னு தெரிஞ்சா நீ உடனே DNA டெஸ்ட் எடுக்க போறான்னு தான் கண்ணம்மா, ஆண்டி எல்லாரும் உன் கிட்ட இந்த உண்மையை மறைச்சிட்டாங்களோ”ன்னு உசப்பி விட, கோபத்தில் இருக்கும் பாரதி ஒருமுறை எடுத்ததே போதும் இனி ஜென்மத்துக்கும் DNA டெஸ்ட் மட்டும் எடுக்க மாட்டேன்ன்னு சத்திய பிரமாணம் செய்கிறான். அதுதானா வேணும் வெண்பாவுக்கு. அதுமட்டுமில்லை, ”கண்ணம்மா வீட்டில் இருக்கும் ஹேமாவை சீக்கிரமா கூடிட்டு வந்துரு இல்லனா அவளையும் கண்ணம்மா மயக்கிட போறான்னு” சீண்டி விட்டு அங்கிருந்து செல்கிறாள்.  எதுக்கு நாம் இங்க இருக்கோமுன்னு தெரியாம அம்மா கண்ணம்மா நினைப்பில் இருக்கும் லட்சுமிக்கு பாட்டி செளந்தர்யா சாப்பாடு ஊட்டுகிறார். வீட்டை சுற்றி சுற்றி பார்க்கும் லட்சுமியிடம் பேச்சு கொடுத்து அவள் மனதில் இருப்பதை போட்டு வங்குகிறார். “ஹேமா ஏன் சமையல் அம்மா வீட்டில் இருக்கா, நான் ஏன் உங்க வீட்டில இருக்கேன்”ன்னு லட்சுமி கேட்கும் கேள்விக்கு பதில் இல்லாமல் தவிக்கிறார் செளந்தர்யா. இந்த பேச்சை மாத்த பாரதி பற்றி கேட்கும் செளந்தர்யா, ஹேமாவை மீண்டும் பழைய ஸ்கூலில் சேர்க்க பாரதி அட்மிஷன் போட்ட விஷயத்தை எண்ணி சந்தோஷப்படுகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அஞ்சலிக்கு ஃபோன் செய்து அவளையும் அழக வைக்கிறாள் வெண்பா. ”உன்ன நெனச்ச ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படி ஒரு உண்மைய சொல்லாம இருக்குறது தப்பு. ஒரு டாக்டர் இதெல்லாம் பண்ண கூடாது” அப்படி இப்படின்னு அளந்து அஞ்சலியை கெஞ்ச வைக்கிறாள். வெண்பாவை முழுசாக நம்பும் அஞ்சலி வெண்பா சொல்லுவதற்கெல்லாம் பயத்தில் தலை ஆட்டுகிறாள். அப்படித்தான் இந்த பிரச்சனைக்கு மருந்து இருப்பதாக அஞ்சலியை நம்ப வைத்து மாத்திரை தருவதாக வெண்பா கூற, அதை நம்பி அந்த மாத்திரையை சாப்பிட சம்மத்தம் தெரிவிக்கிறாள் அஞ்சலி. ஆனால் வெண்பாவின் திட்டம் வேறு. அஞ்சலிக்கு தப்பான மாத்திரையை கொடுத்து அவளை கொஞ்ம் கொஞ்சமாக கொலை செய்ய வேண்டும் என்பதே வெண்பாவின் மாஸ்டர் பிளான். இதுக்கு எல்தி டிப்ஸ் போல் கூடவே இருக்கும் வேலைக்காரி, அந்த மாத்திரையை பாரதியின் ஸ்கிரிபிஷன் பேப்பரில் எழுதி தரும்படி கூறுகிறாள். காரணம் நாளைக்கு பிரச்சனை வந்தா பாரதி மாட்டிக்கிடோம் அப்படின்னு பிளான் பண்றாங்க. ஆனால் இதெல்லாம் செளதர்யாவுக்கு மட்டும் தெரிஞ்சா வெண்பா நிலைமை அவ்வளவு தான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: