• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இப்படி இறங்கிட்டீங்களே.. பாரதி கண்ணம்மா சீரியல் டி.ஆர்.பிக்கு இது கண்டிப்பா உதவும்!

இப்படி இறங்கிட்டீங்களே.. பாரதி கண்ணம்மா சீரியல் டி.ஆர்.பிக்கு இது கண்டிப்பா உதவும்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்த பாரதி பொட்டி படுக்கைகளை எடுத்து கொண்டு கண்ணம்மா வீட்டுக்கு செல்ல தயார் ஆகிறார்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து ரோஷினி வெளியேறிய பின்பு டி.ஆர்.பியில் சறுக்கிய சீரியலை மீண்டும் டாப்பில் கொண்டு வர சீரியல் குழு புது பிளானுடன் களத்தில் குதித்துள்ளது.

    பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி வெளியேறிய பின்பு இப்போது வினுஷா அந்த ரோலில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று. சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றுகொண்டிருக்கிறது. இல்லத்தரசிகளின் பேவரட் சீரியல்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கண்ணம்மாவின் வெளியேற்றத்துக்கு பிறகு சீரியல் டி.ஆர். பியில் பெரிய அளவில் அடிவாங்கியுள்ளது.

    சென்ற வார சீரியல் டி.ஆர்.பி லிஸ்டில் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் 5 இடங்களில் கூட இடம்பெறவில்லை எனவே சீரியலில் கதைக்களம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கதைப்படி தற்போது பாரதியும் - கண்ணம்மாவும் 6 மாத சேர்ந்து வாழ வேண்டும் என கோர்டு உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி இருவரும் ஒரே வீட்டில் 6 மாதம் வாழ வேண்டும். எனவே, இதுப்பற்றி சவுந்தர்யா பாரதியிடம் பேசுகிறார். ஆனால் அதற்கு பாரதி பிடிப்பு கொடுக்காமல் பேசுகிறார்.

    பிக்பாஸ் வீட்டிற்குள் நியூ என்ட்ரி... ப்ரியங்கா உற்சாகம்.. யார் அவர்?

    கண்ணம்மாவும் பாரதியுடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது சீரியல் புரமோ வெளியாகியுள்ளது. அதாவது, கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்த பாரதி பொட்டி படுக்கைகளை எடுத்து கொண்டு கண்ணம்மா வீட்டுக்கு செல்ல தயார் ஆகிறார். இதை பார்த்து மொத்த குடும்பமும் ஆச்சரியத்தில் நிற்கின்றனர்.



    எனவே, இனிவரும் காலங்களில் சீரியல் எபிசோடில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் காட்சிகள் தான் இடம்பெறவுள்ளது உறுதியாகி விட்டது. இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், குத்தல் பேச்சுகள் ஆகியவை சுவாரசியமாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சீரியலும் நல்ல டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கும் எனவும் சீரியல் குழு எதிர்பார்க்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: