பாரதி கண்ணம்மா சீரியலில் தேவையில்லாமல் வாயை விட்டு மூக்கை உடைத்து கொள்கிறார் வெண்பா. ஒட்டுமொத்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் முன்னாடி பாரதி வெண்பாவை பார்த்து அப்படியொரு வார்த்தை சொல்லி விடுகிறார்.
இந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியலின் ஹைலைட்டாக புரமோவில் காட்டப்பட்ட பார்ட்டி காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகுகின்றன. வெண்பா - ரோகித் கல்யாண விஷயத்தை அனைவருக்கும் அறிவிக்கும் வகையில் வெண்பாவின் அம்மா ஷர்மிளா பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அந்த பார்ட்டிக்கு நண்பர்கள், உறவினர்கள் முக்கியமாக பாரதியின் குடும்பம், கண்ணம்மா என அனைவரையும் அழைத்து இருந்தார் ஷர்மிளா. அதற்கு முக்கியமான காரணம், வெண்பாவுக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை ரோகித்தை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பது தான்.
அடுத்த 1 வாரத்திற்கு ட்ரெண்டிங்கில் இருக்க போவது பிக் பாஸ் ஷிவானி தான்!
பார்ட்டியில் ரோகித் ஹீரோ போல் என்ட்ரி கொடுக்க, வெண்பாவின் முகம் கோபத்தில் சிவக்கிறது. பின்னர் ஷர்மிளா ரோகித்தை தன்னுடைய வருங்கால மாப்பிள்ளை என அறிவிக்கிறார். அப்போது மைக்கை வாங்கி பேசும் வெண்பா, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என கூறிவிட்டு பாரதியை தான் இன்னும் காதலிப்பதாக கூறி அனைவருக்கும் ஷாக் தருகிறார். அதாவது ரோகித்தை எல்லோர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்த வேண்டும் என பிளான் செய்து வெண்பா அப்படி பேசுகிறார். ஆனால் கடைசியில் வெண்பாவின் மூக்கு தான் உடைகிறது.
ரோகித் உடனே மைக்கை வாங்கி, பாரதியிடம் நீங்கள் வெண்பாவின் காதலை ஏற்றுக் கொள்கிறீர்களா? என கேட்கிறார். பதில் கூற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாரதி, மைக் பிடித்து பேசுகிறார். வெண்பா எனக்கு எப்பவும் நல்ல தோழி தான், அவரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் கிடையாது. இனிமேல் வரவும் வராது என சொல்லி வெண்பாவின் மூக்கை உடைக்கிறார். பாரதியின் இந்த பதிலை கேட்டு சவுந்தர்யாவின் குடும்பம் கைத்தட்டுகிறது.
ரஜினி பட நடிகைக்கு இப்படியொரு நிலைமையா! சோப்பு விற்பதாக அவரே சொன்ன தகவல்
வெண்பாவால் இந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை, பின்பு ஷர்மிளா பாரதியே சொல்லிவிட்டார் ரோகித் தான் இனி என் மாப்பிள்ளை, நான் அடுத்த வாரம் அமெரிக்கா போகிறேன்., திரும்பி வருவதற்குள் இருவரும் மனம் விட்டு பேசி கல்யாண தேதியை குறித்து வையுங்கள் என வெண்பாவுக்கு அடுத்த ஷாக் கொடுக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv