Home /News /entertainment /

bharathi kannamma : கஷ்டப்பட்டு பிளான் போட்ட வெண்பாவுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

bharathi kannamma : கஷ்டப்பட்டு பிளான் போட்ட வெண்பாவுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

bharathi kannamma today : ரோகித்துக்கு அம்மா - அப்பா இல்லை என கூறி பெரிய பிரச்சனை செய்கிறார் வெண்பா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று வெண்பாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தருகிறார் பாரதியின் அம்மா சவுந்தர்யா.

    பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போகிறதா? இல்லை வேற ட்ராகுக்கு இயக்குனர் பிளான் போட்டு விட்டாரா? என தெரியவில்லை. சீரியல் திரைக்கதை படு வேகமாக செல்கிறது. வெண்பாவின் திருமணம் நடந்தால் மொத்த கதையும் ஓவர் என்பது போல் சீரியல் ஸ்டோரி வந்து நிற்கிறது. வெண்பாவுக்கு திருமணம் நடந்தால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என சவுந்தர்யா நினைக்கிறார். அதே போல் அவரின் கணவர் வேணுக்கும் கேன்சர் இருப்பது போல்  கதை செல்கிறது. இது வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது. இப்படி இருக்கையில் நேற்று முதல் வெண்பாவின் நிச்சயதார்த்த காட்சிகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

    வெளியே போன கோபி... எழிலுக்கு எதிராக திரும்பிய பாக்கியா குடும்பம்!

    ரோகித்தை திருமணம் செய்து கொள்ளாமல் எஸ்கேப் ஆக வேண்டும் என்பதே வெண்பாவின் பிளான். அதற்காக பல திட்டங்களை போடுகிறார். சாந்தியும் நிறைய ஐடியா கொடுக்கிறார். கடைசி நேரத்தில் ரோகித்தை அனாதை என கூறி பெரிய பிரச்சனை செய்கிறார் வெண்பா. ஷர்மிளாவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. நிச்சயதார்த்தம் நின்று விடும் என அங்கிருக்கும் அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் அதுதான் இல்லை. கடைசி நேர ட்விஸ்டாக சவுந்தர்யா வெண்பாவுக்கு அதிர்ச்சி தருகி்றார்.

    விஜய் டிவி கொடுத்த அதிர்ச்சி.. அழுது தீர்த்த ஆங்கர் பிரியங்கா!

    இந்த காட்சிகள் இன்று ஒளிப்பரப்பாகவுள்ளன. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. வெண்பாவின் திட்டத்துக்கு பல்பு கொடுத்து  எல்லோர் முன்னிலையிலும் சொந்த மகன்களிடம் கூட அனுமதி பெறாமல் ரோகித்தை 3வது பிள்ளையாக தத்தெடுத்துக் கொள்கிறேன் என்கிறார் சவுந்தர்யா. ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஷாக். வெண்பா அதிர்ச்சியில் நிற்கிறார். தாய் - தந்தை இல்லாத ரோகித்தை நாங்கள் தத்தெடுத்துக் கொள்கிறோம். கல்யாண செலவை ஏற்று திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறோம் என்கிறார்.



    கஷ்டப்பட்டு போட்ட மொத்த பிளானும் சொதப்பல் என கலங்கி நிற்கிறார் வெண்பா. கடைசியில் நிச்சயாதர்த்தமும் நடக்கிறது. ரோகிக்  ஏமாற்ற தான் ஷர்மிளா வீட்டுக்கு வந்து இருக்கிறார் என்ற உண்மை வெளிவரும் போது தான் இன்னும் பெரிய சம்பவமே இருக்கு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி