• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணம்மாவுடன் சேர நினைப்பது எல்லாம் பொய்... பாரதியின் நடிப்பை பார்த்து செளந்தர்யா குடும்பமே ஷாக்!

கண்ணம்மாவுடன் சேர நினைப்பது எல்லாம் பொய்... பாரதியின் நடிப்பை பார்த்து செளந்தர்யா குடும்பமே ஷாக்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

அஞ்சலி உட்பட இது எல்லாமே உண்மை என நம்பி கண்ணம்மா உடன் பாரதி சேர்ந்து விடுவான் என பகல் கனவு கண்டனர்

  • Share this:
    பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மாவுடன் பாரதி சேர்ந்து விடுவார் என நினைத்த ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் பேரதிர்ச்சி இன்றைய எபிசோடில் காத்துக் கொண்டிருக்கிறது.

    இரட்டை குழந்தையை தேடி கண்ணம்மா ஒருபக்கம் தேடி அலைந்து கொண்டிருக்க பாரதி திடீரென்று திருந்துவது போல் கடந்த 2 நாட்களாக புரமோவிலும் சரி, எபிசோடிலும் சரி காட்சிகள் இருந்தன. ஆனால் இன்றைய எபிசோடில் அந்த அனைத்து காட்சிகளுக்கும் பதில் கிடைத்துள்ளது. கண்ணம்மா தப்பு செய்திருக்க மாட்டாள் என பாரதி எண்ணி, வெண்பாவிடம் பேசியது, அதனைத் தொடர்ந்து வந்து வீட்டில் பேசியது எல்லாமே நடிப்பு. பாரதி குள்ள இப்படியொரு கொடூரமா என ஒட்டு மொத்த குடும்பமும் ஷாக்கில் உள்ளனர். சொல்லப்போனால் ரசிகர்கள் உட்பட செளந்தர்யாவின் குடும்பத்திற்கே பாரதியின் இந்த நடிப்பு அதிர்ச்சியை தந்துள்ளது.

    நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக பாரதி குடும்பத்தினரிடம் பேசி அழ, அதை எல்லோரும் நம்பி உடனே கண்ணம்மாவிடம் போய் மன்னிப்பு கேள், அவளுடன் சேர்ந்து வாழு, நீ பண்ணது தான் தப்புன்னு சொல்ல, அதுவரை அழுது கொண்டிருந்த பாரதி உடனே தனது நிஜ முகத்தை காட்டி குடும்பத்திற்கு ஷாக் கொடுக்கிறான். சும்மா நான் நடிச்சேன், இப்படியெல்லா நான் பேசுனோம் அப்படின்னு தானே நீங்க எதிர்பார்க்கிறீங்க. அது ஜென்மத்துக்கும் நடக்காது என பாரதி பேசி சிரிக்க, மொத்த குடும்பமும் பாரதியை பார்த்து ஷாக் ஆகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அஞ்சலி உட்பட இது எல்லாமே உண்மை என நம்பி கண்ணம்மா உடன் பாரதி சேர்ந்து விடுவான் என பகல் கனவு கண்டனர் ஆனால் பாரதி மொத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து வைத்து விட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த பக்கம் கண்ணம்மா, தொலைஞ்சி போன குழந்தையை பத்தி நினைச்சி வருத்தப்பட, லட்சுமி பிச்சை எடுக்கும் குழந்தைகளை பத்தி பேச, கண்ணம்மாவுக்கு குப்பத்தில் பிச்சை எடுப்பதாக வெண்பா சொன்ன குழந்தை தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த நேரம் பார்த்து ரோட்டில் பிச்சை எடுக்கும் குழந்தையின் சத்தம் கேட்க, கண்ணம்மா ஓடி போயி பார்த்து அழுகிறாள். இது இப்படியே விட்டால் சரியா வராதுன்னு நினைத்து குழந்தை பற்றி போலீசில் புகார் கொடுக்கலாம் என முடிவு எடுக்கிறாள். வீட்டில் தனியாக இருக்கும் லட்சுமியிடம் தனது ஃபோனை கொடுத்துவிட்டு, ஆட்டோ அண்ணனை அழைச்சிட்டு போலீஸ் ஸ்டேஷன் கிளம்புகிறாள். அந்த நேரம் பார்த்து வெண்பா, கண்ணம்மாவுக்கு ஃபோன் பண்ண, அந்த ஃபோனை லட்சுமி எடுக்க, “அம்மா போலீஸ் ஸ்டேஷன்” போனதை லட்சுமி வெண்பாவிடம் சொல்லி விடுகிறாள். பயத்தில் உடனே ஆட்டோ அண்ணன் நம்பருக்கு ஃபோன் செய்த வெண்பா, போலீஸ் ஸ்டேஷன் வாசல் வரை வந்த கண்ணம்மாவை புகார் கொடுக்காதப்படி பேசியே திசை திருப்புகிறாள்.

    குப்பத்தில் இருக்கும் ரவுடி பெண்ணிடம் ஏதோ ஒரு குழந்தையை அடிக்க சொல்லி, அவளை ”அம்மா அம்மா” என கத்த வைத்து அதை கண்ணம்மாவை கேட்க வைக்கிறாள். இதை எல்லாம் உண்மை, அந்த குழந்தை தொலைந்து போன தனது பிள்ளை என நினைத்த கண்ணம்மா புகார் கொடுக்காமலே வீட்டுக்கு கிளம்புகிறாள். ஆட்டோகார அண்ணனுக்கு ஏதோ சந்தேகம் வர, கண்ணம்மாவிடம் விசாரிக்கிறார் வழக்கம் போல் பதில் சொல்லாமல் தவிர்க்கிறாள் கண்ணம்மா. கடைசி வரை கண்ணம்மா வாழ்க்கை இப்படி போராட்டமாகவே செல்லும் போல.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: