முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / டாக்டர் பாரதிக்கு என்ன ஆச்சு? பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோவ இப்படியா மொக்கை பண்ணுவீங்க!

டாக்டர் பாரதிக்கு என்ன ஆச்சு? பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோவ இப்படியா மொக்கை பண்ணுவீங்க!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வாரம் முழுவதும் டாக்டர் பாரதி கண்ணம்மாவிடம் மொக்கை வாங்கும் வாரம் போல. கண்ணம்மா வீட்டில் பாரதி தங்க தொடங்கிய நாளிலிருந்து இப்படியே தான் கதை நகர்கிறது.

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் எப்போதும் டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் இருந்து வந்த நிலையில் சென்ற மாதம் 7 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக பழைய கண்ணம்மா ரோஷினி விலகல் தான் என சொல்லப்பட்டது. திடீரென்று ரோஷினி சீரியலில் இருந்து விலகியதால் ரசிகர்கள் பலரும் சீரியலை பார்க்கும் ஆர்வத்தை குறைத்தன. இந்நிலையில் தான் பழைய கண்ணம்மாவை ஞாபகப்படுத்துவது போலவே வினுஷா தேவி கண்ணம்மாவாக அறிமுகம் செய்யப்பட்டார். இனி புது கண்ணம்மாவாக அவரே நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இவரின் அறிமுகமே கோர்ட் சீனில் தான் தொடங்கியது. விவாகரத்துக்கு அப்ளை செய்த பாரதிக்கு, 6 மாதம் சேர்ந்து வாழும் அவகாசத்தை கோர்ட் வழங்கியது. கோர்ட் உத்தரவை மதித்து பாரதி, கண்ணம்மாவுடன் 6 மாதம் சேர்ந்து தங்க சம்மதித்து கண்ணம்மா வீட்டில் தங்கி இருக்கிறார். இது இப்படி இருக்க, கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் இடையில் தினம் நடக்கும் நீயா? நானா? போட்டியை வைத்தே இயக்குனர் சீரியலை நகர்த்தி வருகிறார்.

டாக்டர் பாரதி இப்படியே, ஆட்டோக்காரர் குமார் அண்ணா தொடங்கி , கண்ணம்மாவுக்கு தெரிஞ்ச எல்லோரிடமும் தொடர்ந்து மொக்கை வாங்கி டென்ஷன் ஆகுகிறார். பொறுமை இல்லா பாரதி அவசர அவசரமாக பேசி பல்பு வாங்குவதே வேலை ஆகிவிட்டது. சமையலில் தொடங்கி, தூங்குவது, ஸ்கூலுக்கு போவது என எல்லா விஷயத்திலும் பாரதியும் கண்ணம்மாவும் போட்டி போட்டு சண்டை போடுகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

' isDesktop="true" id="633809" youtubeid="ubsZvbab7fM" category="television">

அதில் பாரதி, கண்ணம்மா படும் கஷ்டத்தை பார்த்து, 3 கோடி தருவதாக டீல் பேசுகிறார். இதற்கு கண்ணம்மா சம்மதிப்பது போல் பேசிவிட்டு கடைசியில் ஒரு ட்விஸ்டும் வைக்கிறார். அதாவது, புருஷன் என்ற முறையில் 3 கோடி தருகிறேன் என்று சொல்லுங்கள் சந்தோஷமாக வாங்கி கொள்கிறேன் என்கிறார். அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதுன்னு மீண்டும் பாரதி கடுப்பாகிறார். என்னதா இருந்தாலும் பாரதி, சீரியல் ஹீரோ இல்லையாப்பா.. இப்படியே தொடர்ந்து மொக்கை வாங்க வைப்பீங்க?

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vijay tv