கண்ணம்மா பெட்ரூமில் பாரதி.. பார்வையிலே பேசிக்குறாங்கப்பா... இன்றைய எபிசோட் மிஸ் பண்ணாதீங்க!

பாரதி கண்ணம்மா சீரியல்

bharathi kannamma today episode : கண்ணம்மா வீட்டுக்கு செல்வதாக அம்மா செளந்தர்யாவை நம்ப வைக்கிறான் பாரதி.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட் சுருக்கமாக இதோ.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா தொல்லை இல்லாமல் கண்ணம்மா வீட்டுக்கு அடிக்கடி விசிட் அடித்து வருகிறார் பாரதி. காரணம் யாரு ஹேமா தான். ஹேமாவுக்கு உடம்பு சரியாக வேண்டும், இந்த காரணத்திற்காக மட்டும் தான் கண்ணம்மா வீட்டுக்கு செல்வதாக அம்மா செளந்தர்யாவை நம்ப வைக்கிறான் பாரதி ( பார்க்குற ஆடியன்ஸையும் தான்)

    லட்சுமி -ஹேமா புண்ணியத்தில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்துடுவாங்கன்னு ஆடியன்ஸ் பேசிக்குறாங்க. ஆனா கதை போகுற போக்க பார்த்தா அப்படி ஒன்னும் தெரியல. ஹேமாவைக் கூப்பிட்டு ‘உனக்கு உங்க அப்பாவை எவ்வளவு” பிடிக்குமுன்னு கண்ணம்மா கேட்கிறாள். இதற்கு ஹேமா பதில் சொல்ல, அதை பக்கத்து ரூமில் இருந்து ஏகத்துடன் கேட்கிறாள் லட்சுமி (பாவம் குழந்தை அப்பாவ பத்தி பேசினாலே முகம் மாறிடும்)

    பாரதி பத்தி எல்லா நல்லதையும் சொன்ன ஹேமா, “அப்பா அடிக்கடி குடிப்பாரு அப்படின்னு” ஒரு கேட்டதையும் சொல்ல, நம்ம மாஜி மனைவி கண்ணம்மா அதை நினைச்சி கவலைப்படுறாங்க. ஹேமா போன அப்புறம் வழக்கம் போல லட்சுமி வந்து, “என் அப்பா யாரும்மா, அவர நான் எப்பம்மா பார்ப்பேன்”ன்னு கண்ணம்மாவிடம் ஏக்கதோடு கேட்கிறாள். உண்மையை சொல்லவும் முடியாம, மறைக்கவும் தெம்பு இல்லாம வழக்கம் போல் காய்மறையாக பதில் சொல்லி சோகமாக அழுகிறாள் கண்ணம்மா.

    இந்த பக்கம் அஞ்சலி-அகில் எலியும் பூனையுமாய் ஒரு கொய்யாப்பழத்தை வைத்து சண்டை போட்டுக்கொள்கிறார்கள். உடனே அங்கு வரும் மாமியார் செளந்தர்யா புருஷன் பொண்டாட்டிக்கு அட்வைஸ் பண்றாங்க. (விட்டுக்கொடுத்து போங்க, அஞ்சலி மாசமாக இருக்க, அவள சந்தோஷமா வச்சிக்கோ) வழக்கம் போல் மாமியார்களுக்கே உரிதான வசனங்களை செளந்தர்யா ஒப்பிக்கிறாங்க.



    அதுக்கு அப்புறம் ஹேமாவை பார்க்க, கண்ணம்மா வீட்டுக்கு பாரதி வருகிறான். ஏசி ரிமோட்டை வைத்துக்கொண்டு ஹேமாவும் - லட்சுமியும் சண்டைப்போட்டுக் கொள்ள வழக்கம் போல் ரெளடி பேபி லட்சுமியை கலாய்க்கிறான் பாரதி. மூவரும் பெட் ரூமில் நின்று பேசிக்கொள்ள, யதார்த்தமாக எட்டி பார்க்கும் கண்ணம்மா ஷாக் ஆகிறாள். கண்ணம்மா பெட்ரூமில் பாரதி.. பார்வையிலேயே பாரதியை எரித்துவிடுவது போல் ஒரு பார்வை. பின்பு, கண்ணம்மாவை பார்த்ததும் வெளியே வரும் பாரதி ஹேமாவின் உடலை செக் செய்துவிட்டு அவள் நன்றாக இருப்பதாக கண்ணம்மாவிடம் கூறுகிறான். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.
    Published by:Sreeja Sreeja
    First published: