• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bharathi kannamma: மகனா? மருமகளா? முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் சவுந்தர்யா!

Bharathi kannamma: மகனா? மருமகளா? முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் சவுந்தர்யா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

ஹேமாவை 8 வருடமாக கண்ணம்மாவுக்கு தெரியாமல் பொய் சொல்லி வளர்த்தது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்பதை உணர்கிறார்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் மகனா? மருமகளா? என முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார் சவுந்தர்யா.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மா கடந்த ஒரு வாரமாக ரசிகர்களுக்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து வருகிறது. கண்ணம்மாவை பார்த்தாலே எப்போதும் கோபத்துடனும், ஆத்திரத்துடனும் இருக்கும் பாரதி இன்று தன் மகளுக்காக கண்ணம்மாவிடம் கனிவோடு பேசும் காட்சிகளால் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோட்டில், ஹேமா தான் சொந்த மகள் என தெரிந்து கொண்டு அவளுடன் சேர முடியாமல் கண்ணம்மா தவிக்கும் நேரத்தில் அஞ்சலி உதவி செய்கிறாள். 2 நாட்கள் ஹேமாவை பொய் சொல்லி கூடிட்டு போய் கண்ணம்மா வீட்டில் தங்கி இருந்தாள். இந்நிலையில், நேற்றைய தினம் பாரதி, அஞ்சலி வீட்டுக்கு போய் அங்கு ஹேமா இல்லை என தெரிந்ததும், நேரா கண்னம்மா வீட்டுக்கு போய் அங்கு அஞ்சலி, ஹேமா இருப்பதை பார்த்துவிட்டான். செம்ம கோபத்தில் யாரிடமும் சொல்லாமல் அஞ்சலியையும் ஹேமாவையும் கூடிட்டு வந்துவிட்டான்.

    இன்றைய எபிசோடில் அதன் தொடர்ச்சியாக, வீட்டுக்கு வரும் பாரதி கோபத்தில் பயங்கரமாக கத்துகிறான். அதாவது மொத்த குடும்பமும் பிளான் போட்டு ஏமாற்றி ஹேமாவை தன்னிடம் இருந்து பிரிப்பதாக பேசிகிறான். சவுந்தர்யா எவ்வளவு சொல்லியும் பாரதி கேட்பதாக இல்லை. அடுத்த சில நிமிடங்களில் சவுந்தர்யாவுக்கு ஃபோன் செய்யும் கண்ணம்மா, ஹேமாவை கேட்டு மீண்டும் சண்டை போடுகிறாள். மகனுக்காகவும் பேச முடியாமல், மருமகளை திட்டவும் முடியாமல் தனது தவறை எண்ணி தவிக்கிறார் சவுந்தர்யா. ஹேமாவை 8 வருடமாக கண்ணம்மாவுக்கு தெரியாமல் பொய் சொல்லி வளர்த்தது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்பதை உணர்கிறார்.

    இந்த பக்கம், கண்ணம்மா வீட்டில் மூதாட்டி ஒருவர் கொடுத்த நாட்டு மருந்தை வைத்துகொண்டு அஞ்சலி குழப்பத்தில் தனியாக பேசுகிறாள். வெண்பா தப்பான மாத்திரையை தந்தது, இங்கிலீஷ் மருந்து சாப்பிடும் போது இதை சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்? என இப்படி ஏகப்பட்ட குழப்பத்துடன் இருக்கும் அஞ்சலி கடைசியில் மருந்தை சாப்பிடலாம் என முடிவு எடுக்கிறாள். ஆனால் நாட்டு மருந்து எடுத்து கொள்வதை அகிலனிடமிருந்து மட்டும் மறைக்கிறாள்.

    ஸ்ருதியா? தாமரையா? நீதி யாருக்கு.. குறும்படம் யாருக்கு பிக் பாஸ்?

    இந்த நேரத்தில் தான் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக கண்ணம்மாவை தேடி பாரதி, கண்ணம்மாவின் வீட்டுக்கு போகிறான். அதுவும் ஹேமாக்காக தான்.சமையல் அம்மாவாக அவளிடம் பாசம் காட்டுவது எல்லாம் ஓகே. ஆனால் ஹேமாவை என்னிடம் இருந்து மட்டும் பிரிந்து விடாதே என கண்ணீருடன் கண்ணம்மாவை கெஞ்சி கேட்கிறான். வாய்க்கு வாய் என் பிள்ளை, என் மகள், நான் தான் அப்பா என உண்மையை பாரதி சொல்வதை எண்ணி மனதார சந்தோஷப்படுகிறாள் கண்ணம்மா. பாரதியின் அன்பை மதித்து ஹேமாவை நிரந்தரமாக பாரதி வீட்டிலே கண்ணம்மா விட்டுவிடுவாளா? என்பது வரும் தினங்களில் தெரிந்து விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: