Home /News /entertainment /

Bharathi Kannamma: கண்ணம்மா இப்படி கூட நடந்துப்பாளா? அதிர்ச்சியடைந்த பாரதி

Bharathi Kannamma: கண்ணம்மா இப்படி கூட நடந்துப்பாளா? அதிர்ச்சியடைந்த பாரதி

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

நீதி காக்கும் அம்மன் கோவிலில் கண்ணம்மாவுடன் பொங்கல் வைக்க போன பாரதி, நீதி தன்பக்கம் இல்லை, கண்ணம்மா பக்கம் தான் உள்ளது என்கிற கடவுளின் தீர்ப்பால் அதிர்ச்சி அடைகிறான்.

    நீதி காத்த அம்மன் கோவிலில் கண்ணம்மா வைத்த பொங்கல் பானை முதலில் பொங்கியதும், அதன் பின்னர் "இதென்ன அக்கினி பரீட்சையா? கண்ணம்மாவுக்கு சாமி முன்னாடி டெஸ்ட் வச்சியா? இது உனக்கு அம்மன் கொடுத்த நீதி, இப்போ என்ன பண்ண போற?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு பாரதியின் அம்மா சௌந்தர்யா கோபத்தில் பொங்கியதும் நாம் அறிவோம்.

    இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில், நீதி காக்கும் அம்மன் கோவிலில் கண்ணம்மாவுடன் பொங்கல் வைக்க போன பாரதி, நீதி தன்பக்கம் இல்லை, கண்ணம்மா பக்கம் தான் உள்ளது என்கிற கடவுளின் தீர்ப்பால் அதிர்ச்சி அடைகிறான். பின்னர் கண்ணம்மா மற்றும் சௌந்தர்யாவிடம் இருந்து வந்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி நின்ற பாரதிக்கு, தம்பி அகில் ஆதரவு கூறியும் கண்ணம்மா விடுவதாய் இல்லை.

    குற்றம் சொல்லும் போது பேசிய வாய் இப்போது எங்கே போனது என்றெல்லாம் கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறிய பாரதி தான் வீட்டிற்கு செல்வதாய் கூறி கோவிலில் இருந்து கிளம்பி விடுகிறான்.

    அதன் பின்னர் கண்ணம்மாவுடன் பேசும் சௌந்தர்யா, இனி எல்லாமே நல்லதாக நடக்கும், ஒரு பெரிய மாற்றம் வரும் என்று நம்புகிறேன், வீட்டில் நடக்க உள்ள சத்தியநாராயணன் பூஜையில் இருவரும் கலந்து கொள்ள வேண்டும், அதன் பிறகு ஒரு நல்ல மாற்றம் வரும் என்று நம்புவதாக கூறுகிறார்.

    மறுபுறம் பாரதி தனியாக அமர்ந்து, எது சரி? எது தவறு? என்று குழம்பி ஒரு முடிவு எடுத்தே ஆகவேண்டும் என்கிற மனநிலைக்கு வருகிறான். கண்ணம்மா வீட்டிற்கு வந்த பின்னர், தான் சொன்னபடியே கிளம்பும் நேரம் வந்துவிட்டதாக கூறுகிறான்.

    இதனால் அதிர்ச்சி அடையும் கண்ணம்மா "உங்களுக்கு என்னதான் வேணும்? என்ன பிரச்சனை? உங்க மனசு முழுக்க சந்தேகம் மட்டும் தான் இருக்கு. நீங்களே கண்டுபிடிச்சு கூட்டிட்டு போன கோவில்ல எனக்கு கிடைச்ச நீதியை ஏத்துக்கிட்டீங்களா? பேக்கை தூக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டீங்க! அப்போ சாமியே வந்து சொன்னாலும் ஏத்துக்க போறதில்ல!" என்றெல்லாம் கூறி தனது நரக வேதனையை வெளிப்படுத்துகிறாள். ஒரு கட்டத்தில் தன் தலையில் அடித்து கொண்டு கதறி அழுத் தொடங்குகிறாள்.



    இது எதையுமே பொருட்படுத்தாத பாரதி, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? வாக்குவாதம் செய்ய வேண்டுமா? சண்டை எதுவும் போடாமல் அமைதியாக வெளிய போக ஆசைப்படுறேன், என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை என்று மீண்டும் சொல்கிறான்.

    மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

    "அத்தை கிட்ட என்ன சொல்வீங்க?", "கோர்ட்ல என்ன பதில் சொல்வீங்க?" என்றெல்லாம் கண்ணம்மா கேட்க, அதை நான் பார்த்துக்கிறேன் என்று கூறி, "நான் என் மனசாட்சி சொல்வதைக் கேட்டுத்தான் நடக்கிறேன்" என்று பாரதி சொல்ல, கண்ணம்மா கோபத்தின் உச்சிக்கே செல்கிறாள். மழை பெய்ய பெய்ய ஒரு பாறை கூட கரையும், ஆனா உன் மனசு உறைஞ்சு போச்சு என்கிறாள்.

    அதையும் பொருட்படுத்தாமல் பாரதி கிளம்ப முயற்சிக்கும் போது, உடைந்து போன கண்ணம்மா சுவற்றில் இடித்துக்கொண்டு அழுகிறாள். அதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி