விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இந்த வாரம் அதிரடியான திருப்பங்களுடன் நகர்கிறது.
கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிரந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.
கண்ணம்மாவும் ஹேமாவும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த பாரதி, அவளை பள்ளியில் இருந்து நிறுத்தி, அமெரிக்கா அழைத்துச் செல்கிறான். போகும் வழியில் ஹேமாவுக்கு வலிப்பு ஏற்பட அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். எவ்வளவு சிகிச்சையளித்தும் அதற்கு பதிலளிக்காத ஹேமா, சமையல் அம்மா’ என்பதை மட்டும் முணுமுணுக்கிறாள். அதனால் அவரை அழைத்து வந்தால் ஹேமாவை காப்பாற்றி விடலாம் என மருத்துவர் சொல்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் கண்ணம்மாவை தேடி அவள் வீட்டுக்குச் செல்கிறான் பாரதி. ”என் கூட நீ ஹாஸ்பிடலுக்கு வரணும், ஹேமாவுக்கு ஃபிக்ஸ் வந்துடுச்சு” என்கிறான். “ஹேமாவுக்காக நா வர்றேன்” என பாரதியின் காரில் ஏறுகிறாள் கண்ணம்மா. மருத்துவமனையில் கண் விழித்த ஹேமா கண்ணம்மாவை பார்த்து மகிழ்ச்சியாகிறாள். ஹேமாவை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்கிறாள் கண்ணம்மா. அதோடு ”இனி உனக்கு எந்த பிரச்னையும் வராது. இனி நான் உன்கூட தான் இருப்பேன்” என ஹேமாவிடம் கூறுகிறாள்.
போதாக்குறைக்கு, ”ஹேமாவுக்கு எந்த மருந்து மாத்திரையும் தேவையில்ல, இந்த சமையல் அம்மா போதும். நான் எவ்ளோ ட்ரீட்மெண்ட் கொடுத்திருப்பேன், எதுக்கும் ரெஸ்பான்ஸ் பண்ணாத ஹேமா, இப்போ எப்படி பேசுறா பாத்தியா” என பாரதியிடம் கூறுகிறார் மருத்துவர் பிரியா. பின்னர் ஹேமாவை ஜூஸ் குடிக்க சொல்கிறார் மருத்துவர். அதற்கு கண்ணம்மாவிடம் தன்னை ஜூஸ் குடிக்க வைக்கும்படி கேட்கிறாள்
பின்னர் தனக்கு அமெரிக்கா போக விருப்பமில்லை என சொல்கிறாள். அதற்கு, உன் விருப்பத்தை மீறி யாரும் உன்னை அழைத்துச் செல்ல மாட்டார்கள். உன் அப்பாவிடமே சொல் என்கிறாள் கண்ணம்மா. நான், தாத்தா, பாட்டி, அஞ்சலி சித்தி எல்லோரும் சொல்லியும் அப்பா கேட்கவில்லை என்கிறாள்.
இதையடுத்து ‘நமக்கு பிடிச்சவங்கக் கிட்ட விட்டுக் கொடுத்து போறது தான் உண்மையான அன்பு, இவ்வளவு பிடிவாதமா இருக்காத டா பாரதி’ என அழுகிறார் செளந்தர்யா. பின்னர் ஒருவழியாக, ‘சரி அமெரிக்கா போக வேணாம்’ என்கிறான் பாரதி. இதைக் கேட்ட ஹேமா மகிழ்ச்சியாகிறாள்.
இதைத்தொடர்ந்து ’ஹேமா இன்னும் ஒரு வாரத்துக்கு உன்னுடன் இருக்கணுமாம், எங்க வீட்டுக்கு வா’ என கண்ணம்மாவை அழைக்கிறான் பாரதி. ’அதுக்கு எதுக்கு நான் அங்க வரணும், ஹேமாவ இங்க கொண்டு வந்து விடுங்க’ என்கிறாள் கண்ணம்மா. ஈகோவை விட்டு விட்டு, பாரதி ஹேமாவை அழைத்துக் கொண்டு கண்ணம்மா வீட்டுக்கு செல்வான் எனத் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கண்ணம்மா வீட்டில், பாரதியும், ஹேமாவும் அமர்ந்து சாப்பிடும் படம் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.