• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அந்த ஒரு ரோலுக்காக மோசமாக திட்டிய ரசிகர்கள்... நடிப்பையே விட நினைத்தவர் இன்று பாரதி கண்ணம்மா துளசியாக ஜெயித்துவிட்டார்!

அந்த ஒரு ரோலுக்காக மோசமாக திட்டிய ரசிகர்கள்... நடிப்பையே விட நினைத்தவர் இன்று பாரதி கண்ணம்மா துளசியாக ஜெயித்துவிட்டார்!

பாரதி கண்ணம்மா துளசி

பாரதி கண்ணம்மா துளசி

சில நேரங்களில் இந்த சீரியலை விட்டே போயிடலாமா என நினைத்தவரை தேற்றியது துளசியின் அம்மா தான்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் துளசியாக நடிக்கும் சின்னத்திரை நடிகை ஷெரின் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்கள்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் துளசியாக நடிக்கும் நடிகை ஷெரின் ஜானு இதுவரை 5 சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த சீரியலும் வாங்கி தராத பெயர் மற்றும் புகழை பாரதி கண்ணம்மா சீரியல் வாங்கி தந்துள்ளது. இப்போது கதையின் முக்கிய முடிச்சே துளசியிடம் தான் உள்ளது. இடையில் இவரை சீரியலில் காட்டாத போது துளசி கேரக்டர் குறித்து பல ரசிகர்கள் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் கமெண்ட் செய்தனர். குறுகிய காலத்திலேயே சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருக்கும் துளசி ஆரம்பத்தில் கடுமையான மன உளைச்சலையும் சந்தித்திருக்கிறார்.

    அதாவது, இவரின் முதல் சின்னத்திரை அறிமுகம் என்றால் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான திருமணம் சீரியல் தான். அந்த சீரியலில் சித்துவின் காதலியாக நடித்திருப்பார். இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அந்த சீரியலில் சந்தோஷ- ஜனனி திருமணத்திற்கு பிறகு இவர் ரீஎண்ட்ரி ஆகி சந்தோஷத்தை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுப்படி வற்புறுத்துவார். கிட்டத்தட்ட நெகட்டிவ் ரோல் மாதிரி காட்சிப்படுத்தப்பட்ட இவரின் காட்சிகள் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியிருந்தது. அந்த சீரியலில் சக்தியாக இவரின் நெகடிச்வ் ரோலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதனால் இனிமேல் இதுபோன்ற ரோலில் நடிக்க வேண்டாம். சில நேரங்களில் இந்த சீரியலை விட்டே போயிடலாமா என நினைத்தவரை தேற்றியது துளசியின் அம்மா தான்.

    இவரின் முழு பலமும் அம்மா மற்றும் அக்கா தானாம். அக்கா குழந்தையை இவரே இப்போது வளர்க்கிறார். அந்த அளவுக்கு அந்த குழந்தை மீது அலாதியான பாசத்தை வைத்துள்ளார். திருமணம் சீரியலுக்கு பிறகு சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் கமலா பாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குஷ்புடன் சேர்ந்து நடித்திருப்பார். இந்த ரோலில் முதலில் பாக்கியலட்சுமி புகழ் ராதிகா (ஜெனிஃபர்) நடித்திருந்தார். சன் டிவி சீரியலுக்கு பின்பு தான் பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இடையில் காணாமல் போனவர் ஜீ தமிழில் சித்திரம் பேசுதடி சீரியல் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். இப்போது மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் இவரின் கதாபாத்திரம் முக்கியம் என்பதால் துளசி ரோலில் நடிப்பை தொடர்ந்து வருகிறார். இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். ஜெயின் ஸ்கூல் மற்றும் ஜெயின் காலேஜில் பட்டப்படிப்பை முடித்தவர், லயோலோ கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார். இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் வர முதலில் டிக் டாக் மூலம் பயணத்தை தொடங்கினார்.

    அதன் மூலம் பல ஆல்பம் சாங்கில் நடித்தார். அப்படியே தனது திறமை மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் இன்று துணை நடிகையாக உயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இவர் மீடியாவை தேர்ந்தெடுத்ததும் சொந்தக்காரர்கள் வேண்டாம் என்று முட்டுக்கட்டு போட்டனராம். ஆனால் அவரின் அம்மா துணையாக நிற்க இன்று துளசி என்றால் பலருக்கும் தெரியும்படி நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஷெரின்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: