சின்னத்திரை மாமியார்களில் முதலிடம் கண்ணம்மா மாமியாருக்கு தான்! ஆனால் நிஜத்தில்?

பாரதி கண்ணம்மா சவுந்தர்யா

குறிப்பாக இவரின் புடவை, மேக்கப் பெரிதளவில் பேசப்பட்டது. சின்னத்திரையில் கவனம் பெற்ற நடிகையாக மாறினார்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் மாமியார் சவுந்தர்யாவாக நடிக்கும் பிரபல நடிகை ரூபா ஸ்ரீ பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள்.

  சின்னத்திரை டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் மாமியராக நடிக்கும் சவுந்தர்யாவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். சின்னத்திரை மாமியார்களில் இவர் தான் பெஸ்ட் என்ற பேச்சும் உண்டு. அந்த அளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர். கண்ணம்மா வீட்டை விட்டு போன எபிசோடுகள், அவரை தெரு தெருவாக தேடி அலைந்த சீன்கள், பாரதியை கண்ணம்மாவுக்காக அடித்த காட்சிகள் என இவரின் நடிப்புகாக இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. ஒட்டு மொத்த சீரியலையும் தூண் போல் கட்டி காக்கிறார்.

  13 வயதில் தொடங்கிய இவரின் திரைப்பயணம் 20 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வெற்றிக்கரமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழில் டி.ஆர் இயக்கிய எங்க வீட்டு வேலன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். வெள்ளித்த்ரையில் வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரையில் பயணத்தை ஆரம்பித்தார். சன் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்தார். அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்தார். இதன் மலையாள சீரியலிலும் இவரே மாமியர். இதில் குறிப்பாக இவரின் புடவை, மேக்கப் பெரிதளவில் பேசப்பட்டது. சின்னத்திரையில் கவனம் பெற்ற நடிகையாக மாறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழ் - மலையாளம் தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கலக்கி வருகிறார். ஏஷியாநெட் சேனல் ஒளிபரப்பாகி வரும் சீதா கல்யாணம் தொடரிலும் தற்போது நடித்து வருகிறார். தமிழில் டாப் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் சவுந்தர்யாக கேரக்டரில் பெஸ்ட் மாமியாராக வலம் வருகிறார். ஆரம்பத்தில் வில்லி மாமியராக இருந்தவர் இன்று கண்ணம்மாவின் உண்மையான பாசத்தை புரிந்து கொண்டு பெஸ்ட் மாமியார் ஆகிவிட்டார்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Rupa sree official இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rupasree01)


  அவ்வப்போது இன்ஸ்டாவில் குட்டீஸ் ஹேமா மற்றும் லட்சுமியுடன் சேர்ந்து ரீல்ஸ்களை வெளியிடுவார். சீரியலில் கோபத்தில் கொஞ்சம் உரத்த குரலில் பேசும் சவுந்தர்யாவின் கேரக்டர் நிஜத்தில் அப்படியே வேற மாதிரி. ரொம்ப சைலண்ட். அமைதியாக தான் பேசுவாராம்.ஆனால் செம்ம ஜாலியான கேரக்டராம். இவர் இருந்தாலே அந்த இடம் சிரிப்பு நிறைந்து இருக்குமாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: