Bharathi Kannamma Lakshmi: பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை லட்சுமி யார் தெரியுமா?

Bharathi Kannamma Lakshmi: பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை லட்சுமி யார் தெரியுமா?

பாரதி கண்ணம்மா லட்சுமி

கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமி துடிப்பாக பேசும் குழந்தை, படித்து பெரியாளாகி கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டவள்.

  • Share this:
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கர்ப்பமாக இருந்த கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறியதும் இந்த சீரியலின் டி.ஆர்.பி எகிறியது. பின்னர் அவருக்கு இரட்டை குழந்தைகளும் பிறந்தன. அதில் சிவப்பாக பிறந்த செளந்தர்யலட்சுமி கண்ணம்மாவிடமும், கறுப்பாக பிறந்த ஹேமா பாரதியும் வளர்ந்து வருகிறார்கள். இந்த உண்மை கண்ணம்மாவின் மாமியார் செளந்தர்யா, மாமனார் வேணு மற்றும் கொழுந்தனார் அகில் ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.

கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமி துடிப்பாக பேசும் குழந்தை, படித்து பெரியாளாகி கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டவள். அதோடு தனது அம்மா கண்ணம்மா எந்த சூழலிலும் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவள். சரி இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். லட்சுமியாக நடிக்கும் குழந்தை யார் தெரியுமா?

பிரபல சீரியல் நடிகரும் பாடகருமான ஷியாமின் இரண்டாவது மகள். உண்மையான பெயர் ரக்‌ஷா செளகான். கோலங்கள், மாயா, யாரடி நீ மோகினி, மரகதவீணை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள ஷ்யாம், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் ‘மால்டோ கீதாபுளே’ என்ற பாடலை பாடியிருக்கிறார். ஷ்யாமின் மூத்த மகள் நிவாஷினி செளகான், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியலில், துரைசிங்கத்தின் மூத்தமகள் கனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மாவில் லட்சுமியாக நடித்து வரும் ரக்‌ஷா, இதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திலும் நடித்திருக்கிறார்!



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: