Home /News /entertainment /

நீங்க தான் என் அப்பா.. உண்மையை சொல்லி பாரதியிடம் அழும் லட்சுமி!

நீங்க தான் என் அப்பா.. உண்மையை சொல்லி பாரதியிடம் அழும் லட்சுமி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமிக்கு ஏற்கெனவே எல்லா உண்மையும் தெரிந்து விட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் லட்சுமியின் அழுகை சீரியல் பார்ப்பவர்களையும் கண்கலங்க வைக்கிறது.

    பாரதி கண்ணம்மா போன வார எபிசோடில் பாரதிக்கு ஹேமா குறித்த உண்மை தெரிய வந்தது. கண்ணம்மாவுக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்பதில் தொடங்கி அதில் ஹேமாவை சவுந்தர்யா தூக்கி வந்து வளர்த்த எல்லா கதையும் பாரதிக்கு தெரிந்து விட்டது. உடைந்து அழுகிறார். ஆனால் கடைசியில் ஹேமாவுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக செல்கிறார். கடைசியில் கண்ணம்மாவும், ஹேமாவை பாரதியிடம் இருந்து பிரிக்க மாட்டேன் என சத்தியம் செய்து விடுகிறார். இதனால் பாரதிக்கு நிம்மதி வர மகா சங்கமம் எபிசோடு முடிவடைந்தது. இந்நிலையில் இந்த வாரத்தில் மற்றொரு ட்விஸ்ட் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

    இது த்ரிஷாவுக்கு தெரியுமா? ’பொன்னியின் செல்வன்’ குந்தவை போல் மாறிய பிக் பாஸ் ஸ்ருதி!

    பாரதியிடம் நீங்க தான் என் அப்பா என கூறி  அழுகிறார் லட்சுமி. கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமிக்கு ஏற்கெனவே எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. பாரதி தான் அப்பா, கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் பெரிய சண்டை அதனால் தான் இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்பது வரை லட்சுமிக்கு தெரியும். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள் லட்சுமி. ஆனால் இன்றைய எபிசோடில் தன்னை அறியாமல் உடைந்து அழுது, பாரதியை அப்பா என்று அழைக்கிறார்.

    சிவகார்த்திகேயன் உண்மையில் எப்படிப்பட்டவர்? விஜய் டிவி பிரபலத்தின் வைரல் பதிவு!

    ஸ்கூலில் மீட்டிங். அதற்காக பாரதி ஸ்கூலுக்கு ஹேமாவுக்காக செல்கிறார். ஹேமா டீச்சரிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இதை லட்சுமி பார்க்கிறார். தனக்கு அப்பாவாக பாரதி இருந்து, டீச்சரிடம் பேசினால் எப்படி இருக்கும்? என ஆசையாக நினைக்கிறார். அந்த ஆசையில் ஓடோடி போய் பாரதியிடம் பேசுகிறார். கண்ணம்மா இன்னும் வரல, ஒருநாளைக்கு அப்பாவாக நின்று டீச்சரிடம் பேசுங்கள் என்கிறார்.



    ஆனால் பாரதி அதற்கு சம்மதிக்கவில்லை. முடியாது என அங்கிருந்து வேகவேகமாக செல்கிறார். கடைசியில் லட்சுமி நீங்க தான் என அப்பா, அம்மா, பாட்டி எல்லோரும் என்னிடம் சொன்னார்கள் என்கிறார். பாரதிக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரியும் என்பது அப்போது தான் பாரதிக்கு  விளங்குகிறது. ஆனாலும் பாரதி தனது கோபத்தை விடுவதாக இல்லை. அதே நேரம் லட்சுமியை ஏமாற்றவும் மனசு வரவில்லை. அழுதப்படியே அங்கிருந்து வேக வேகமாக நடக்கிறார்.

    லட்சுமியும் பாரதி பின்னாடி ஓடி கெஞ்சுகிறார். ஆனால் கடைசிவரை பாரதி மனம் இறங்கவில்லை. லட்சுமி தேம்பி  தேம்பி அழுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி