• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய பாரதி கண்ணம்மா நடிகை - வைரலாகும் வீடியோ!

ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய பாரதி கண்ணம்மா நடிகை - வைரலாகும் வீடியோ!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

இதில் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினி ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்துள்ளார்

  • Share this:
    விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடி கொண்டிருக்கும் தொடர் “பாரதி கண்ணம்மா”.TRP-யில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் இதுவும் ஒன்று.

    பாரதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு கண்ணம்மா மீது அவதூறு பரப்பினார். இதனை நம்பிய பாரதி, கண்ணம்மாவை கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். கர்ப்பிணியான கண்ணம்மா, தனியாக வாழ்ந்து இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுக்கிறாள்.

    இதனையறிந்து கொண்ட கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா, மருத்துவமனைக்கு சென்று ஒரு குழந்தையை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறாள். கண்ணம்மா, தான் பெற்றெடுத்தது ஒரே பெண் குழந்தை என நினைத்து லட்சுமி என பெயர்சூட்டி வளர்க்கிறாள். சௌந்தர்யா ஒரு குழந்தையை தத்தெடுத்து வந்ததாக பாரதியிடம் கூறிவிட்டு அதற்கு ’ஹேமா’ என பெயர் சூட்டி வளர்க்கிறார்.

    ஹேமாவும் பாரதியை தன்னுடைய அப்பா என நினைத்து வளரும் நிலையில், தன்னுடைய அம்மா யார் என்ற விவரம் தெரியாது. அதேநேரத்தில் பாரதிக்கும் ஹேமா தன்னுடைய குழந்தை என தெரியாது. கண்ணம்மாவுக்கும், பாரதி வீட்டில் வளரும் குழந்தை தனது மகள் என தெரியாது. காலப்போக்கில் வளரும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கும்போது நெருங்கிய தோழிகளாக மாறுகின்றனர். அதேபோல ஹேமாவும், கண்ணம்மா மீது பாசமாக இருக்கிறார். பாரதியும்,கண்ணம்மாவும் இணைந்தார்களா? வில்லி வெண்பா இவர்களை எவ்வாறு பிரிக்கிறார் ? மாமியார் சௌந்தர்யா என்ன செய்யப்போகிறார்? என்று இப்படியாக கதை செல்கிறது.

    இதனால் இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினி ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்துள்ளார். அதே போல், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ரூபாஸ்ரீ. இவர் கண்ணம்மாவின் மாமியாராக நடித்து வருகிறார். இவருக்கும் ரோஷினி போல் பெரிய ரசிக பட்டாளமே உள்ளது.

    இதோ அந்த வீடியோ..



     




    View this post on Instagram





     

    A post shared by Rupa sree official (@rupasree01)






    இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல சுவாரஸ்ய நடன வீடியோ மற்றும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். மிமி திரைபடத்தில் இடம்பெற்றுள்ள ‘பரம் சுந்தரி’ பாடல் இன்றைய இளைஞர்களின் பேவரைட் பாடலாக உள்ளது. இப்பாடலுக்கு இசையமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே காட்டுத்தீ போல் பரவி வைரலானது.

    அந்த வகையில் தற்போது 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தை கலக்கி வரும் பரம் சுந்தரி பாடலுக்கு நடனமாடி அசத்திய வீடியோவை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: