Home /News /entertainment /

பேருக்கு தான் வில்லி.. பாரதி கண்ணம்மாவில் மீண்டும் ஏமாறும் வெண்பா!

பேருக்கு தான் வில்லி.. பாரதி கண்ணம்மாவில் மீண்டும் ஏமாறும் வெண்பா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தான் இத்தனை சதி வேலைகளையும் வெண்பா செய்தார்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக டாக்டர் பாரதியின் வாழ்க்கையில் கேம் ஆடிய வெண்பாவின் லைஃபில் ரோகித்தின் என்ட்ரி பெரிய திருப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

    பாரதி - கண்ணம்மா இருவரும் 9 ஆண்டுகளாக பிரிந்து இருப்பது,  லட்சுமி அப்பா இல்லாமல் தவிப்பது, ஹேமா அம்மாவை தேடி அலைவது என ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை  DNA டெஸ்ட் மூலம் மாற்றியவர் வில்லி வெண்பா. இதுமட்டுமில்லை பாரதி காலேஜில் காதலித்த ஹேமாவை லாரி ஏற்றி கொன்றதில் இருந்து, சித்தப்பாவை ரூமில் அடைத்து கொலை செய்ய நினைத்தது வரை வில்லி வெண்பா செய்யாத வில்லத்தனமே இல்லை . இது எல்லாம் பாரதிக்காக மட்டும் தான். பாரதியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தான் இத்தனை சதி வேலைகளையும் வெண்பா செய்தார்.

    also read.. ஜனனியை காணோம்... எதிர் நீச்சல் சீரியலில் பரபரப்பு!

    அப்படி இருக்கையில், கடைசியில் பாரதி வெண்பாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் வெண்பாவின் அம்மா ரோகித் என்ற மாப்பிள்ளையை வெண்பாவுக்கு பார்த்து இருக்கிறார். ரோகித் தான் மிகப் பெரிய பணக்காரர், பிசினஸ் மேன் என்றெல்லாம் பொய் சொல்லி வெண்பாவின் அம்மா ஷர்மிளாவை ஏமாற்றுகிறார். ஷர்மிளாவும் ரோகித்தை முழுசா நம்பி மாப்பிள்ளை என்றும் தீர்மானித்து விடுகிறார்.

    ஆனால் வெண்பாவுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. எப்படியாவது ரோகித் பற்றிய உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை. இப்படி இருக்கையில் வேலைக்காரி சாந்தி, ரோகித் பற்றிய மிகப் பெரிய உண்மையை கண்டுப்பிடிக்கிறார். அதை வெண்பாவிடமும் சொல்கிறார். இதை நிரூப்பிக்க இருவரும் ஆதாரம் தேடுகின்றனர்,. ஆனால் அதற்குள் ரோகித் ஸ்மார்ட்டாக மூவ் செய்ய தொடங்கி விட்டார்.

    also read.. பாக்கியலட்சுமியில் கோபியின் நாடகம் முடிவுக்கு வரும் நேரம்..குடும்பத்துக்கு உண்மை தெரிந்தது!

    இன்றைய எபிசோடில் சாந்தி ஃபோன் செய்த விஷயம் ரோகித்துக்கு தெரிந்து விட்டது. ஷர்மிளாவிடம்  5 லட்சம் வாங்கியது பற்றியும் வெண்பா விசாரிக்கிறார். அதற்குள் ரோகித்  வைர நெக்ளஸ் வாங்கிவிட்டு வந்து  ஈஸியாக ஏமாற்றி விடுகிறார் . வில்லி வெண்பா மறுபடியும் ரோகித்திடம் ஏமாந்து போகிறார். ரோகித் பற்றிய உண்மை தெரியாமல் இருக்கும் வரையில் தான் கதையில் சுவாரசியம் இருக்கும் என்பதால் இயக்குனர் இப்போதைக்கு வெண்பா  ரோகித் ட்ராக்கை அதிக முக்கியத்துவத்துடன் எடுத்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி