பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா அடுத்து கர்ப்பமாக இருப்பது போல் காட்சிகள் வரவுள்ளன என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே இருக்கும் குழந்தை பிரச்சனைக்கு இன்னும் முடிவு எட்டாத நிலையில் அடுத்த குழந்தையா? என ஷாக்கில் ரசிகர்கள் தெறித்து ஓடுகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல், பலருக்கும் ஃபேவரெட் சீரியலாக இருந்தாலும் நெட்டிசன்களால் அதிக கலாய்க்கு உள்ளாகும் சீரியலில் பாரதி கண்ணம்மா தான் முதலிடம். ஒரு DNA டெஸ்ட் எடுத்தால் மொத்த சீரியலின் கதையும் முடிந்து போகும். ஆனால் அதை கடைசி வரை எடுக்காமல் 3 ஆண்டுகளுக்கு மேலாக சீரியலை ஓட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர் பிரவீன் பென்னட். பீக் டைமில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் அரங்கேறி வருகின்றன.
கண்ணம்மாவாக நடித்த ரோஷினி திடீரென்று சீரியலில் இருந்து விலக, புது கண்ணம்மாவாக வினுஷா தேவி இப்போது நடித்து வருகிறார். பிரசவத்திற்காக ஃபரீனா பிரேக் எடுத்து இருந்தார். அவரும் இப்போது வந்து விட்டார். ‘வாய்தா வடிக்கரசி’ ரோலில் அறந்தாங்கி நிஷா எண்ட்ரி கொடுத்துள்ளார். ரோஷினியின் விலகலுக்கு பின்பு சீரியல் டி.ஆர்.பி அடி வாங்கியது. அதை சரி செய்ய சீரியல் குழு ஏகப்பட்ட மாற்றங்களை செய்து வருகிறது .
இதையும் படிங்க.. கனா காணும் காலங்கள்: ஆசைக்காட்டி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய் டிவி!
இந்நிலையில், கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா கர்ப்பமாக இருப்பது போல் பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கண்ணம்மா, சீரியலில் மகளாக நடிக்கும் ஹேமா மற்றும் லட்சுமியுடன் டிக் டாக் செய்யும் வீடியோ தான் அது. அந்த வீடியோவில் கண்ணம்மா கை நிறைய வளையல் போட்டுக் கொண்டு , கர்ப்பமாக இருப்பது போல் மேக்கப் போட்டு இருக்கிறார். அப்படி என்றால் சீரியலில் கண்ணம்மா கர்ப்பமாக இருப்பது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை ரசிகர்கள் யூகித்து உள்ளனர்.
View this post on Instagram
ஒருவேளை இந்த காட்சிகள் கனவாக கூட இருக்கலாம் எனவும் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. காரணம், தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையில் அடிக்கடி ரொமான்ஸ் காட்சிகள் நடப்பது போல் புரமோ காட்டப்பட்டு, கடைசியில் எபிசோடில் அது கனவு என ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குனர். அப்படி தான் இந்த கண்ணம்மாவின் கர்ப்ப காட்சிகளும் இருக்கலாம் என்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv