• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுயமரியாதை கண்ணம்மாவா இப்படி? தாய் பாசம் வெண்பா காலில் விழ வைத்துவிட்டது!

சுயமரியாதை கண்ணம்மாவா இப்படி? தாய் பாசம் வெண்பா காலில் விழ வைத்துவிட்டது!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

தாய் பாசத்தில் கண்ணம்மா, வெண்பாவின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள்.

  • Share this:
    தன்மானம் மிக்க கண்ணம்மா குழந்தை பாசத்தில் வெண்பாவின் காலில் விழுந்து கெஞ்சுவது தான் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட். கண்டிப்பாக கண்ணம்மா ரசிகர்களுக்கு இது பிடிக்காத காட்சி என்றாலும் கூட தாய் பாசத்தில் கண்ணம்மாவின் பாசமே வெல்கிறது.

    இரட்டை குழந்தை உண்மை தெரிந்ததில் இருந்து கண்ணம்மா ஆளே மாறிவிட்டார். பாவம் யாருமே உதவாத நிலையில அவரே தனது குழந்தையை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். துளசி, சவுந்தர்யா என கண்ணம்மாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய கடைசியில் வெண்பாவின் பேச்சை கேட்பது போல் கண்ணம்மா நிலை மாறிவிட்டது. நேற்றைய தினம் வெண்பா குழந்தை இருக்கும் இடம் தெரியும் என்று சொன்ன பொய்யை நம்பி அவளுடன் காரில் கண்ணை கட்டிக்கொண்டு கண்ணம்மா சென்றாள். அங்கு யதார்த்தம் என்பவரை வெண்பாஅறிமுகப்படுத்த அவளிடம் தான் குழந்தை இருப்பதாக கூறி ஏமாற்றுக்கிறாள். பாவம் கண்ணம்மா அது உண்மை என நினைத்து வெண்பாவிடம் கெஞ்சுகிறார்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட வெண்பா இந்த உண்மையை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டுகிறார். பாரதி, போலீஸ், சவுந்தர்யா என யாரிடம் சொன்னாலும் குழந்தையை கொல்வேன் என்கிறாள். அதுமட்டுமில்லை கண்ணம்மாவுக்கு சில விதிமுறைகளும் விதிக்கிறாள். தினமும் வெண்பாவுக்கு ஃபோன் செய்து திருமதி பாரதி என கூப்பிட்ட வேண்டும் என கீழ்த்தரமாக பேசுகிறாள். கண்ணம்மாவுக்கு கோபம் வருகிறது ஆனாலும் தாய் பாசம் அவளை கட்டி போடுகிறது. இதையெல்லாம் ஒழுங்காக செய்தால் குழந்தை இருக்கும் இடத்தை சொல்வதாக கூறிவிட்டு மீண்டும் கண்ணம்மாவை கண்ணை கட்டியப்படி பிக் அப் செய்த இடத்திற்கே வந்து விடுகிறாள் வெண்பா. தாய் பாசத்தில் கண்ணம்மா, வெண்பாவின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள். குழந்தை காட்டும்படி கண்ணீருடன் தவிக்கிறாள். ஆனால் வெண்பாவோ பாய் சொல்லிவிடு கிளம்புகிறாள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த பக்கம் அஞ்சலி, அந்த பரிகாரத்தைப் பற்றி அகிலனிடம் பேசுகிறாள். வழக்கம் போல் அகில், அஞ்சலியை திட்டி தீர்க்கிறான். படிச்ச பொண்ணு மாறி நடந்துக்கோன்னு அட்வைஸ் பண்ணிட்டு ஆஸ்பிடட்டல் போலாம்ன்னு கூப்பிடுறான். ஆனால் அஞ்சலி வரமாட்டேன்னு அடம் பிடிக்க கோபத்தில் அகிலன் அங்கிருந்து கிளம்புகிறான். அடுத்ததது , சவுந்தர்யா தன் மீது சந்தேகம் வர கூடாதுன்னு கண்ணம்மா வீட்டுக்கு செல்கிறார். பார்த்தால் வீட்டில் கண்ணம்மா இல்லை. அனைத்து ராஜ தந்திரங்களும் வீண் ஆக லட்சுமி மட்டுமே வீட்டில் இருக்கிறாள். தாத்தாவும் பாட்டியும் லட்சுமியுடன் விளையாடுகிறார்கள். லட்சுமி பசிக்குதுன்னு சொல்ல சவுந்தர்யாவே பேத்திக்காக ஸ்பெஷலாக சமைத்து கொடுக்கிறார். மூன்று பேரும் சந்தோஷமாக செல்பி எடுக்கிறார்கள். அப்போது தான் கண்ணம்மாவின் எண்ட்ரி.

    ஆனால் வந்தவர்களிடம் கண்ணம்மா முகம் கொடுத்து பேசவில்லை. லட்சுமியையும் திட்டுகிறாள். எல்லாத்துக்கும் அந்த இரட்டை குழந்தை விஷயம் தான் காரணம். இனிமே லட்சுமியை பாரதி இருக்கும் வீட்டுக்கு கூப்பிட வேண்டாம் எனவும் கடுகடுக்கிறாள். கண்ணம்மாவின் பிரச்சனையை புரிந்து கொண்ட சவுந்தர்யா அவளிடம் ஆறுதலாக பேசுகிறார். ஆனாலும் கண்ணம்மா மீண்டும் குழந்தை பற்றி கேட்க, சவுந்தர்யா பதில் சொல்ல முடியாமல், உன் குழந்தை சீக்கிரமாக உன்கிட்ட வந்து சேரும்ன்னு ஆறுதல் படுக்கிறார். சவுந்தர்யாவே சொல்லும் வரை இந்த உண்மை கண்ணம்மாவுக்கு தெரிய வாய்ப்பில்லை போல.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: