Bharathi Kannamma: கைகள் உரசி காதல் பார்வையை பரிமாறிக் கொள்ளும் பாரதி கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா சீரியல்

செடிகளை பாரதியும், கண்ணம்மாவும் இணைந்து நட்டு வைக்கிறார்கள். இருவரின் கைகளும் உரசிக் கொள்கிறது. அப்போது காதல் பார்வையை பரிமாறிக் கொள்கிறார்கள்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் சமீபத்திய ப்ரோமோவில், கண்ணம்மா மீது பாரதியின் காதல் பார்வை விழுந்திருப்பதாக தெரிகிறது.

    கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிரந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

    HBD Dhanush: எப்போதும் பெஸ்ட்டை தரும் 'நடிப்பு அசுரன்’ தனுஷ் பிறந்தநாள்!

    கண்ணம்மாவும் ஹேமாவும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த பாரதி, அவளை பள்ளியில் இருந்து நிறுத்தி, அமெரிக்கா அழைத்துச் செல்ல முயல்கிறான். ஏர்போர்ட்டுக்கு போகும் வழியில் ஹேமாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். எந்த சிகிச்சைக்கும் செவி சாய்க்காத ஹேமா, சமையல் அம்மா... சமையல் அம்மா என முனங்குகிறாள். இதைப் பார்த்த மருத்துவர் சமையல் அம்மாவை அழைத்து வர சொல்கிறார்.

    தளபதி 66 படத்தை இயக்குகிறாரா தெலுங்கு இயக்குநர் வம்சி?



    கண்ணம்மா வீட்டுக்கு விரையும் கையோடு அவளை அழைத்து வருகிறான். அவளைப் பார்த்த ஹேமா, மகிழ்ச்சியாகிறாள். அதோடு அமெரிக்கா போகும் திட்டத்தையும் கை விடுகிறான் பாரதி. ஹேமாவுக்கு முழுமையாக உடல்நிலை குணமாகாத நிலையில், அவளுக்கு சிகிச்சை சமையல் அம்மா தான் என்று கூறும் மருத்துவர் குறைந்தது ஒருவாரம் ஹேமா, சமையல் அம்மாவுடன் இருக்க வேண்டும் என்கிறார். இதனால் கண்ணம்மாவை தன் வீட்டுக்கு அழைக்கிறான் பாரதி. ஆனால் அங்கு வர மறுக்கும் கண்ணம்மா, ஹேமாவை தன் வீட்டில் கொண்டு வந்து விடும்படி கூறுகிறாள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால் வேறு வழியில்லாமல், ஹேமாவை கண்ணம்மா வீட்டில் விடுகிறான் பாரதி. இந்நிலையில் விஜய் டிவி வெளியிட்ட சமீபத்திய ப்ரோமோவில், ஹேமாவிடம் வீடியோ காலில் பேசுகிறான் பாரதி. ஹேமாவின் பின்னால் நிற்கும் கண்ணம்மாவையும் அப்போது பார்க்கிறான். ’ஐ லவ் யூ..’ என்றவாறு முத்தம் கொடுக்கிறான் பாரதி. இதைப் பார்க்கும் கண்ணம்மா ஒருநொடி ஸ்தம்பிக்கிறாள். பின்னர் ரோஜா செடிகளை வாங்கிக் கொண்டு கண்ணம்மா வீட்டுக்கு போகிறான் பாரதி. அவனை பின் தொடர்ந்து, செளந்தர்யாவும் செல்கிறார். செடிகளை பாரதியும், கண்ணம்மாவும் இணைந்து நட்டு வைக்கிறார்கள். இருவரின் கைகளும் உரசிக் கொள்கிறது. அப்போது காதல் பார்வையை பரிமாறிக் கொள்கிறார்கள். கண்ணம்மா செய்த உப்மாவை சாப்பிட்டு, ‘நல்லாருக்கு’ என்கிறான் பாரதி. இதை ஒளிந்திருந்து பார்க்கும் செளந்தர்யா, “நல்லாருக்காம்... நாங்க செஞ்சு குடுத்தா, என்னென்ன சொல்வ நீ வீட்ல. உனக்கு இருக்கு டா இன்னைக்கு” என நினைக்கிறார்.

    வெகுநாள் கழித்து வெளியாகியுள்ள பாரதி கண்ணம்மாவின் இந்த காதல் காட்சி, ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: