Home /News /entertainment /

Bharathi Kannamma: பாரதி மீது காதல் கொள்ளும் கண்ணம்மா - இணைவதற்கான அறிகுறியோ?

Bharathi Kannamma: பாரதி மீது காதல் கொள்ளும் கண்ணம்மா - இணைவதற்கான அறிகுறியோ?

பாரதி  கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டுக்கு சென்ற பாரதி, கொரோனா தொற்று காரணமாக அங்கேயே தங்க நேரிடுகிறது.

    பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரோமோ பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

    கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிரந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.



    இதற்கிடையே ஹேமாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர், கண்ணம்மா தான் அவளுக்கு மருந்து என்கிறார். இதனால் கண்ணம்மாவுடன் ஒரு வாரம் தங்குவதற்காக, அவள் வீட்டில் கொண்டு சென்று ஹேமாவை விடுகிறான் பாரதி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டுக்கு சென்ற பாரதி, கொரோனா தொற்று காரணமாக அங்கேயே தங்க நேரிடுகிறது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ஹேமாவுக்கும், லட்சுமிக்கும் ‘குட் டச் பேட் டச்’ பற்றி சொல்லிக் கொடுக்கிறாள் கண்ணம்மா. அப்போது வரும் பாரதி, ‘அவங்க தொடுறது உங்களுக்கு பிடிக்கலைன்னா... டோண்ட் டச்’ என சொல்ல வேண்டும் என்கிறான். அவனை மெய் மறந்து ரசிக்கிறாள் கண்ணம்மா.

    ஒரே வீட்டில் தங்கள் குழந்தைகளுடன், பாரதியும், கண்ணம்மாவும் இருக்க, இதைப் பார்த்து மனம் மகிழ்ந்து போயிருக்கிறார்கள் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி