Bharathi Kannamma: ’அடுத்தவங்க உதவில நான் உயிர் வாழ வேணாம்’ கண்ணம்மா எடுத்த அதிரடி முடிவு

Bharathi Kannamma: ’அடுத்தவங்க உதவில நான் உயிர் வாழ வேணாம்’ கண்ணம்மா எடுத்த அதிரடி முடிவு

பாரதி கண்ணம்மா சீரியல்

கண்ணம்மா உடல் நலிவடைந்ததற்குக் காரணம் வெண்பா செலுத்திய விஷ ஊசி.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா கடந்த வாரம் முழுக்க ’சமையல் ஆண்டியாக’ பாரதியின் வீட்டில் இருந்தாள்.

    வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதியும், கர்ப்பமாக இருந்த கண்ணம்மாவும் பிரிந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கிடையே தனக்கு இரட்டை குழந்தை பிறந்த விபரம், மயக்கத்தில் இருந்த கண்ணம்மாவுக்கு தெரியாது. அதனால் கறுப்பாக பிறந்த குழந்தையை மாமியார் செளந்தர்யா, தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். தன் மீது பாசமாக இருக்கும் ஹேமா, தனக்கு பிறந்த குழந்தை தான் என பாரதிக்கு இன்னும் தெரியாது.

    துளசியுடன் வசித்து வரும் கண்ணம்மா ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கையில் மயங்கி விழ, அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான் பாரதி. கண்ணம்மா உடல் நலிவடைந்ததற்குக் காரணம் வெண்பா செலுத்திய விஷ ஊசி. இதற்கிடையே அவள் ஆபரேஷனுக்கு பணமின்றி துளசி தவிக்க, தனது கார்டை கொடுத்து உதவுகிறான் பாரதி.



    கண்ணம்மா நலம் பெற்று வீடு திரும்பிய பின், சிகிச்சைக்கு எவ்வளவு செலவானது என துளசியிடம் கேட்க, வேறு வழி இல்லாமல் பாரதி உதவி செய்த விஷயத்தை சொல்கிறாள். அந்த நேரம் கோலப்போட்டி நடக்கிறது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் விஷயத்தைத் தெரிந்துக் கொண்ட கண்ணம்மா, அதில் கலந்துக் கொள்கிறாள்.

    தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், கோலப்போட்டிக்கு நடுவராக வரும் கண்ணம்மாவின் மாமியார் செளந்தர்யா, அவளின் கோலத்துக்கு முதல் பரிசை அறிவிக்கிறார். பணத்தை வாங்கிய கண்ணம்மா, “இந்தாங்க அத்த” எனக் கொடுக்கிறாள். “எனக்கு எதுக்குமா” என்றதற்கு, “எனக்கு உடம்பு சரியில்லாதப்ப, கார்ல கூட்டிட்டு போய் ஹாஸ்பிடல்ல சேத்து, வைத்தியம் பாத்தது உங்க மகன் தான். யாரோட உதவியிலயும் நான் உயிர் வாழ்ந்ததா இருக்கக் கூடாது. இது அவரோட டாக்டர் ஃபீஸ்” என பணத்தை செளந்தர்யாவின் கையில் திணித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறாள் கண்ணம்மா.

    அடுத்து நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: